search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிட் வீச்சு"

    • தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்து கேட்ட மனைவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்தார். கணவர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அப்பெண் கண்டுபிடித்தாள்.

    அப்பெண் தாய் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் அங்கு வந்த அந்த நபர் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    • மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை.
    • உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

    2013ல், உச்ச நீதிமன்றம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது: சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயும், மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு டெல்லியில் ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆசிட் தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. காதலை நிராகரித்த, திருமணத்தை மறுத்த, வரதட்சணை வாங்க முடியாத பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆசிட் வீச்சு வன்முறை பல நாடுகளில் நிகழும் அதே வேளையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியாவில் இது அடிக்கடி நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய சட்ட ஆணையம், 2008ல் சமர்ப்பித்த 226வது அறிக்கையில், ஆசிட் வீச்சு வன்முறையை விரிவாகக் குறிப்பிட்டு, அதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த சட்டம் அடங்கும். ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் அமில விற்பனையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. ஆனால், மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை. டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி, தனது அறிக்கையில் சட்ட ஆணையத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பிரச்னைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாலியல் வன்முறையைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றியது மற்றும் ஆசிட் தாக்குதலைச் சமாளிக்க ஐபிசியில் பிரிவுகள் 326A மற்றும் 3268 ஐச் செருகியது, ஆனால் அமிலத் தாக்குதலைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றத் தவறிவிட்டது.

    இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் 3264 மற்றும் 3268 ஆகியவை இந்தக் குற்றத்தை நிவர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதால், ஆசிட் வீச்சுகள் உயிருக்கு ஆபத்தானது என்று உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிட் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆசிட் விற்பனையை விஷப் பொருள்கள் சட்டம், 1919ன் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆணையிட்டது. இதற்கு அவர்கள் சொந்த விதிகளை உருவாக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படியும், தி வர்மா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆசிட் வீச்சுகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை:

    மானாமதுரையை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரையில் உள்ள விஜய மார்த்தாண்டம், என்பவரது நகை கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, நகை பட்டறை உரிமையாளருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென, நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டம், சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில், அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
    • நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த துகாரம் என்பவர் பிரவுனி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு திடீரென கண் அருகே காயம் ஏற்பட்டது. அது எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்வதற்காக துகாரம் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சபிஸ்தா அன்சாரி என்ற பெண் அந்த நாய் மீது ஆசிட் வீசியதைப் பார்த்து துகாரம் அதிர்ச்சி அடைந்தார்.

    சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையுடன் துகாரம் வளர்த்து வந்த நாய் விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதற்கு சபிஸ்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவத்தன்று அவர் பூனையுடன் விளையாடிய நாய் மீது ஆசிட் வீசியது தெரிய வந்தது. இதனால் நாய் பிரவுனிக்கு கண் பார்வை இழந்ததோடு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும், இதுதொடர்பாக துகாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சபிஸ்தா அன்சாரி மீது விலங்குகளை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையே, கண் பார்வை இழந்த நாயை, தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

    அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் சுதீர்கான் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்தன. வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். அப்போது சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இருந்தபோதிலும் சஜிகுமார் பிடிபட்டால் தான் சரியான காரணம் தெரியவரும் என்பதால் தலைமறைவாகிய அவரை போலீசார் தீவிரமாக தேடினர்.

    அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது அவரது செல்போன் சிக்னல் தமிழக பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகம் விரைந்தனர். மேலும் சஜிகுமார் குறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது

    இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் சஜிகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேரள போலீசார், மதுரைக்கு விரைந்தனர். போலீசாருக்கு வந்த முதற்கட்ட தகவலில், சஜிகுமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்று கருதி, பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கேரளா போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

    • மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார்.
    • திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

    அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.

    சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடினர்.

    அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்த புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வீட்டுக்குள் சுதீர்கான் முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் தீக்காயமடைந்து வலி தாங்காமல் அலறி துடித்தார்.
    • சுதீர்கானின் வீட்டுக்குள் கிடந்த ஆசிட் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளராக உள்ளார். மேலும் மாரநல்லூர் ஊராட்சி கிளிகொட்டுகோணம் வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சஜிகுமார் என்பவர் ஒரு பார்சலுடன் வந்திருக்கிறார். அவர் வீட்டில் இருந்த சுதீர்கானின் மனைவி ஹிருனிசாவிடம், சுதீர்கானை சந்தித்து பார்சல் ஒன்றை கொடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    இதையடுத்து சஜிகுமாரை வீட்டுக்குள் அனுப்பினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து சுதீர்கான் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹிருனிசா, வீட்டுக்குள் வந்து பார்த்தார். அப்போது செல்போன் வெடித்து சிதறிவிட்டது என்று கூறி விட்டு சுதீர்கானை பார்க்க வந்திருந்த சஜிகுமார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

    வீட்டுக்குள் சுதீர்கான் முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் தீக்காயமடைந்து வலி தாங்காமல் அலறி துடித்தார். இதையடுத்து தனது கணவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹிருனிசா சேர்த்தார். அங்க அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மீது ஆசிட் வீசியதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சுதீர்கானின் வீட்டுக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டின் இருந்த துணிகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கிடந்ததை பார்த்தனர்.

    மேலும் அவரது செல்போன் வெடிக்காமல் நல்ல நிலையில் இருந்ததை பார்த்தனர். இதனால் சுதீர்கானின் மீது ஆசிட் வீசப்பட்டதை உறுதி செய்தனர். அவரை சந்திக்க வந்த சஜிகுமார் தான், சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    சுதீர்கானின் வீட்டுக்குள் கிடந்த ஆசிட் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் சஜிகுமார் ஒரு பார்சலுடன் வீட்டுக்குள் வரும் காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அவர் எதற்காக ஆசிட் வீச்சில் ஈடுபட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.

    சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுதீர்கான், திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரான்சிகா கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரான்சிகா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அவரது வீட்டின் அருகே வந்தபோது பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது ஆசிட் வீசினர்.

    இதில் அவரது தலை மற்றும் முகம் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தபடி சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடிச்சென்று பிரான்சிகாவை மீட்டனர் .

    சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக பிரான்சிகாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார் .

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆனாலும் போலீசாருக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
    • ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த பின்னர் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் கண்டித்தும், கவிதா கேட்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்தார். இதனை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கவிதாவை பார்த்த, சிவக்குமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    திராவகம் வீச்சில் 85 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சுமார் ஒரு மாதமாக கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    திராவகம் வீச்சில் காயமடைந்த கவிதா இறந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.
    • ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா (வயது40). லாரி டிரைவர். இவருக்கு கவிதா(35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா மீது ஆர்.எஸ்புரம் போலீசில் 2 திருட்டு வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் வெளியில் வந்த அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த கவிதாவின் கணவர் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கவிதா குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரை சிவா தேடி வந்தார்.

    இதற்கிடையே கவிதா திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக நேற்று கோவை கோர்ட்டிற்கு வந்தார். இதனை அறிந்ததும் சிவா தனது பெற்றோர், குழந்தைகளுடன் கோர்ட்டிற்கு வந்தார்.

    அங்கு நின்ற தனது மனைவியிடம் நீ இல்லாமல் நமது குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறது. நீ எங்களுடன் வந்துவிடு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். ஆனால் அவர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா முதலாவது தளத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சிவா, தான் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை கவிதா மீது ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை வக்கீல்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிட் வீசியதில் கவிதாவின் கழுத்துக்கு கீழ் அனைத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆசிட் வீசியதில் அவர் 80 முதல் 85 சதவீத தீக்காயம் அடைந்துள்ளது. அவருக்கு டாக்டர்கள் இன்று 2-வது நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இருந்த போதிலும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது, ஆசிட் வீசியதில் கவிதாவுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

    ஆசிட் என்பதால் அவரது உடல் முழுவதும் அரித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டவர்கள் யாரும் உயிர் பிழைத்தது இல்லை. இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம். இருந்தபோதிலும் தற்போது வரை அவர் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

    • தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கவிதா தனது கணவரை பிரிந்து, கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்துள்ளார்.

    கணவர் பலமுறை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கவிதாவிடம் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில், கவிதா 2016-ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக இன்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து அவரது கணவர் சிவக்குமார் வந்துள்ளார்.

    அவர் தனது மனைவியிடம், நீ பிரிந்து சென்றுவிட்டாய். நானும், குழந்தைகளும் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    எனவே நீ எங்களுடன் வந்துவிடு என கூறினார். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார்.

    சிவக்குமார் தொடர்ந்து பேசியும், அவர் எனக்கு கோர்ட்டிற்கு நேரமாகிறது என கூறி விட்டு கோர்ட்டிற்குள் சென்றார். சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டிற்குள் சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இங்கு பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என நினைத்த கவிதா கணவரை விட்டு நகர்ந்து, ஜே.எம்.1 கோர்ட்டு அருகே சென்று நின்று கொண்டார்.

    தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவக்குமார் தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்து எடுத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கொண்டு மனைவி நின்ற இடம் நோக்கி நடந்து சென்றார்.


    அவரின் அருகில் சென்றதும் தான் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் ஆசிட் பற்றி அவரது சேலை முழுவதுமாக எரிந்தது.

    இதனை அருகே நின்ற பெண் வக்கீல் ஒருவர் பார்த்து வேகமாக ஓடி சென்று தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணிண் மீது போட்டார். ஆனால் அதுவும் எரிந்ததுடன், வக்கீலின் கையிலும் காயம் ஏற்பட்டது.

    ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே நின்றிருந்த வக்கீல்கள் அனைவரும் ஓடி வந்தனர்.

    அவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை அங்கு இருந்த பெண் போலீஸ்காரர் பார்த்து அவரை பிடியுங்கள் என கூறவே வக்கீல்கள் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் எதற்காக ஆசிட் வீசினாய் என விசாரணை நடத்தினர். அதற்கு அவர் தனது மனைவி என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றதால் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்தும் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கு இருந்தவர்களிடம் விசாணை நடத்தினர்.

    பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கோர்ட்டுக்குள்ளாகவே பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    ×