search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா தொடங்கியது
    • வருகின்ற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் நாரத கான சபா 78-ம் ஆண்டு விழா நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.ரமேஷ்பாபு பங்கேற்றார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் எஸ்விஆர் கிருஷ்ணன் 78-ம் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் உதவி துணை தலைவர் ஆர்.பி.முத்தையா பரிசு வழங்கினார். விழாவையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஆக. 10-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • ஆண்டு விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.மெஞ்ஞானபுரம் வியா பாரிகள் சங்கசெயலாளர் செல்வின் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மேலாளர் குட்வின்ராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் காசிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது எனவும், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு செல்வார்கள்.அவ்வாறின்றி கடைகளை மாநகராட்சி அகற்றினால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    பொருளாளர் பெரிய சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய நிர்வாகிகளை பணியவர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
    • விழாவில் முன்னாள் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், வைரமூர்த்தி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ரோட்டரி சங்க ஆண்டு விழாவும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது.

    ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக ஆர். முருகேசன், செயலாளராக கே. முருகேசன், பொருளாளராக பால் குணசீலன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய நிர்வாகிகளை பணியவர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், வைரமூர்த்தி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தேசியக்கல்லூரி 103-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது
    • தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்கிறார்

    திருச்சி:

    திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தேசியக்கல்லூரி. 1886 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கி, 1919 ஆம் ஆண்டு தேசியக்கல்லூரியாக உருவெடுத்தது. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த கல்லூரி தற்போது வரை பொன் விழா, வைர விழா, முத்து விழாக்களை கொண்டாடி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி நூற்றாண்டு விழாவையும் கோலாகலமாக கொண்டாடி பெருமை கொண்டுள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு கல்லூரியின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

    சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கல்வி சேவையாற்றி வரும் திருச்சி தேசியக்கல்லூரி தேசிய கல்வித்தர மதிப்பீட்டு குழுவினரால் (நாக் கமிட்டி) ஏ பிளஸ் அந்தஸ்தை பெற்றுள்ளதோடு, பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கல்லூரியாகவும் திகழ்ந்து வருகிறது. திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மாணவ, மாணவிகளின் கல்வி தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தேசியக்கல்லூரியின் 103-வது ஆண்டு விழா வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் விழா தொடங்குகிறது. விழாவில் கல்லூரி தாளாளர் கே.ரகுநாதன் வரவேற்புரையாற்றி சிறப்பு விருந்தினரை கவுரவிக்கிறார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் கல்லூரி ஆண்டறிக்கை வாசிக்கிறார்.

    விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தலைமை உரையாற்றுகிறார். விழா நிறைவில் திருச்சி தேசியக்கல்லூரி ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான பெனட் நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேசியக்கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக கல்லூரி ஆண்டு விழா அழைப்பிதழை, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வழங்கினார்.

    • சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பு யாக வேள்வி பூஜைகள், பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து பால், தயிர் உட்பட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் மூலவர், உற்சவருக்கு நடந்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள் பாலித்தனர்.

    பின்னர் உற்சவ–மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி 25-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழா தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

    கல்லூரியில் 25 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணி புரியும் காளிமுத்து கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறுகையில், ஏழை, எளிய மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும். அந்த குடும்பத்தின் பொருளாதார உயர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் தந்தை டாக்டர் இ. எம். அப்துல்லா ஆரம்பித்த இந்த கல்லூரி 25-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்கலைக்கழக அளவில் சாதனை புரியும் மாணவ, மாணவிகளுக்கு நிறுவனர் டாக்டர் அப்துல்லாவின் பெயரில் ஆண்டுதோறும் தங்கப் பதக்கம், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தக் கல்லூரியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடு களிலும், வெளி மாநிலங்க ளிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் வேலை செய்து கை நிறைய சம்பளம் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

    விழாவில் பேராசிரியர்கள், அலுவலக பணியா ளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×