என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நோயாளி"
- நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
- மருத்துவரை தாக்கிய 3 போரையும் போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் 'அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம்' என அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
தலையில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை காண வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை தாக்கும் காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மருத்துவரை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
India needs to introduce anger management course ??"At a private hospital in Sehore, Bhavnagar district, a doctor was attacked after asking attendants of a female patient to remove their footwear before entering the emergency ward." #Bhavnagar pic.twitter.com/bSqRLvr9v2
— Kumar Manish (@kumarmanish9) September 15, 2024
- உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
- தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு ஏற்ப, ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த நிலையில் சக்திவேல் (வயது 60) என்ற நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து விட்டதால் சக்திவேல் தவழ்ந்தபடி அவசர சிகிச்சை கட்டிடத்தை நோக்கி சென்றார்.
இதனைப் பார்த்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், முதியவரை மீட்டு சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி மழையில் நனைந்தபடி தவழ்ந்து செல்வதும், அவரை மீட்டு ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
- ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
- நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
- உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராயபுரம்:
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னா (வயது 30). திருமணமானவர். இவர் தொண்டையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருக்கு நவம்பர் 1-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சின்னா உள்நோயளியாக தங்கி கிச்சையில் பெற்று வந்தார். எனினும் நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிவந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சின்னா ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு ஆஸ்பத்தரியில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி, செப்.16-
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்தி ட டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்ட ரிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார். பின்னர், மாணவ ர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாண வர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது.
இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மற்றும் விலங்குகள் மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உயிருடன் இருக்கும் நோயாளிக்கு உலகில் முதல்முதலாக பன்றியில் இருந்து இதயம் சம்பந்தமான மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்த போதிலும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனாலும் தொடர்ந்து அமெரிக்க நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார்
- ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
நாகர்கோவில் :
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடை பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ மனையில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இடைக்கோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தையும், ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உடையார்விளையில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்து செய்நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
28-ந்தேதி (திங்கட்கி ழமை) நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நோக்கில் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வ தற்கான தேர்வு செய்யப்பட்ட இடமான கன்னியாகுமரி சூரிய ஆஸ்தமன முனை முதல் பரமாத்மலிங்கபுரம் தபால் நிலையம் வரை ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் தூத்துக்கு டிக்கு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
- டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர்.
- 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லக்னோ :
உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.
இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்" என்றார்.
பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-
வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
- மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.
இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர்.
திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும்
- அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.
இங்குள்ள 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக இந்த 2 வார்டுகளில் தான் அனுமதிக்கப்படுவார்கள். 4-வது வார்டு பெண் நோயாளிகளும், 5-வது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர். பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.
இந்நிலையில் இன்று இந்த 2 வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
அப்போது திடீரென மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழ தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.
இருந்தாலும் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததில் தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர் .
இவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முககவசம் அணிந்து வர வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் அறிவித்தார்.
அதன்படி இன்று தஞ்சைராசாமி ராசுதார் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வரும் மருத்து வர்கள், செவிலி யர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
மேலும் மருத்துவமனை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் செல்வம் அறிவுறுத்தினார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்