search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மருத்துவர் தினம்"

    • மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு.
    • நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள்.

    டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலை போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதல்-அமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.


    மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.

    நோயாளிகளின் நல்வாழ்வுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள், நோய்நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறார்கள். அவர்கள் மருத்துவ அறிவியலை நன்கு புரிந்துகொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை கொண்டு மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தின் கருப்பொருள் 'குணப்படுத்தும் கரங்கள், அக்கறையுள்ள இதயங்கள்' என்பதாகும். மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது.


    மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். நமக்கு மருத்துவ ஆலோசனைகளை கூறும் நம் மருத்துவர்களிடம் இன்று அன்பையும், நன்றியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்வோம்.

    • மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
    • திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் இன்ட்ராக்ட் மாணவர்கள் சார்பில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருப்பூர் மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் மருத்துவர்களை மாணவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டதுடன் மருத்துவர்களிடம் பணிகளின் மகத்துவங்களை கேட்டு அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி மற்றும் பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பள்ளியின் முதல்வர் பிரமோதினி , ஒருங்கிணைப்பாளர்கள் வி.மோகனா , நித்யா , பள்ளியின் இன்ட்ராக்ட் பொறுப்பாளர் ஆசிரியை ரஞ்சிதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.

    தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழாவில் மருத்துவர்களாக வேடமணிந்து சிறுவர்கள் வந்து அசத்தினர்.
    • ஏ.வி.பி. பள்ளியில் படித்து இன்று மருத்துவ மாணவர்களாக மக்கள் பணி செய்ய காத்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்–பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் மருத்துவர்களை வாழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவரும் அவினாசி மகேஸ்வரி மெடிக்கல் சென்டர் நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் ஆர்.பிரகாஷ், பல் மருத்துவர் டாக்டர் கவிதா ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவம் குறித்த சிறப்பான தகவல்களை வழங்கினர்.

    அவர்களை பள்ளி முதல்வர் வரவேற்றார். விழாவில் மருத்துவர்களாக வேடமணிந்து சிறுவர்கள் வந்து அசத்தினர். இதில் ஏ.வி.பி. பள்ளியில் படித்து இன்று மருத்துவ மாணவர்களாக மக்கள் பணி செய்ய காத்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் ஏ.வி.பி. பள்ளி நிர்வாகத்தால் கவுரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.

    ×