search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை வியாபாரிகள்"

    • தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42). பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர், நான் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்கு மாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அசோக்குமார் ரூ.1 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

    முன்னதாக காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அசோக்குமார் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    3 பேரிடமும் தொழில் ரீதியான பழக்கத்தில் ஒரே மாதிரி பேசி ரூ.7.5 லட்சத்தை அசோக்குமார் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் பலரிடமும் இது போல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ×