என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குருநாதசாமி கோவில்"
- ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் பகுதியில் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் என்னும் வைரஸ் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா இன்று தொடங்கி 12 ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் மாநில அளவில் மாடு, குதிரைகள், அரிய இன வகை கால்நடைகள் கால்நடை சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் பகுதியில் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் என்னும் வைரஸ் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ராஜஸ்தான் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் வைரஸ் நோய் தாக்குதல் இருப்பதாலும், இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அந்தியூர் குதிரை சந்தையில் அனுமதி இல்லை என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
மேலும் அந்தியூர் குருநாதசாமி கோவில் கால்நடை சந்தைக்கு வரும் குதிரைகள் முறைப்படி பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
- தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தேர்த் திருவிழா தொடங்கி நடப்பது வழக்கம். மேலும் கோவில் விழாவில் புகழ் பெற்ற கால்நடை சந்தையும் நடக்கும்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டு கோவில் விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்தாண்டு கோவில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான அந்தியூர் புது ப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவுக்கான தேர்கள் தயார் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
இதை தொடர்ந்து இன்று காலை காமாட்சி அம்மன், பெருமாள் சாமி, குருநாத சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் பெருமாள் சாமி, மற்றொரு தேரில் குருநாத சாமி மற்றும் காமாட்சி அம்மன் தனி தனி தேரில் எழுந்தருளினர்.
இதையடுத்து குருநாதசாமி கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு சென்றது. தேர்களை பக்தர்கள் சுமந்தப்படி சென்றனர். தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.
இதில் அந்தியூர், புது ப்பாளையம், கோபி செட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் இன்று கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு வனக்கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு மீண்டும் குருநாதசாமி கோவிலுக்கு வந்தடைகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். விழா வரும் 12-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தென் இந்தியாவிலேயே புகழ் பெற்ற குதிரை மற்றும் மாட்டுச் சந்தை இன்று காலை தொடங்கியது.
இவ்விழா மற்றும் கால்நடை சந்தையை காண தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர்.
மன்னர் காலங்களில் போருக்கு பயன்படுத்திய உயர் ரக குதிரைகளான மார்வார், நொக்ரா, கத்தியவார் உள்ளிட்டவை ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் விற்பனைக்காக வந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள், கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி மற்றும் ஆந்திரா வை பூர்விமாகக் கொண்ட ஓங்கோல் இன மாடுகளும் கால்நடை சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளை வாங்கிச் செல்வதற்கு தமிழக மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர்.
இந்த கால்நடை சந்தையை காண ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு கழித்து சென்றனர்
கோவில் திருவிழாவு க்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பி. எஸ்.எஸ். சாந்தப்பன், கோவில் செயல் அலுவலர் மோகனபிரியா மற்றும் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
- திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வரும் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.
அதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதலும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தையும், 16-ந் தேதி பால்பூஜையும் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் லட்சக ணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொட ர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைகூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவல கத்தில் ஆர்.டி.ஓ. திவ்யபி ரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்பு த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அறிவுரை வழங்கினார்.
- கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது.இ க்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை, பாரம்பரிய கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.த ற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதி கரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமி ழகம் மட்டும் இன்றி அண்டை மாநி லங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் எதி ர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டும் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை காண ஏராளமானோர் வருவது வாடிக்கையாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரண மாக பண்டிகை நடை பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க வரும் 15-ந் தேதி காலை 11 மணிக்கு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கலெக்டரின் வழிகாட்டுதல் படி ஏலம் ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இந்த ஏலம் ரத்து செய்யவும்வழிவகை இருப்பதாக அந்த ஏல அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பண்டிகை நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்தில் மீண்டும் அந்தியூர் பகுதி மக்களும் வெளி மாவட்டத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு வரும் வியாபாரிகளும் உள்ளனர்.
- அந்தியூர் அடுத்த புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த பண்டிகையின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தும் பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடை நடத்துவதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ராட்டினம் உள்ளிட்டவை அமைப்பதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து இடத்தின் உரிமையாளர் இடத்தில் பேசுவதா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் வியாபாரிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துபவர்களும் உள்ளனர்.
இருப்பினும் இந்த ஆண்டு குருநாதசாமி கோயில் பண்டிகை நடைபெறும் என்ற ஆவலோடு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்