search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் குவிப்பு"

    • ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர்.
    • முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தபள்ளி மாணவர்கள் அக்கட வல்லி பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கு பஸ் ஏறுவதற்காக வந்தனர். அப்போது இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

    இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடை ந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை க்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
    • இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கைகாட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அப்பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் உள்ள பாலம் மற்றும் வேகத்தடையில் அக்கட்சியின் கொடியை பெயிண்டால் வரைந்து இருந்தனர். அதன் மேல் மற்றொரு சமூகத்தினர் சம்பவத்தன்று சிவப்பு பெயிண்டால் அழித்து உள்ளனர். இதனால் இரு பிரிவினுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா மற்றும் போலீசார் இருவரும் அழைத்து நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திட்டக்குடி- ராம–நத்தம் நெடுஞ்சாலையில் உள்ள பெரங்கியம் பகுதி நெடுஞ்சாலை ஓரம் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை யாரோ அவிழ்த்து சென்று விட்டதாக கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மீண்டும் இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    இரு பிரிவினரிடையே மோதல் பெண்ணாடத்தில் பதட்டம்-போலீஸ் குவிப்பு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் திருவட்ட த்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பை சேர்ந்த 6 இளைஞர்கள் 3 இருசக்கர வாகனங்களில் திருவட்டத்துறையிலிருந்து பெண்ணாடம் நோக்கி விருத்தாசலம் - திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    பெண்ணாடம் அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அவர்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு பிரிவை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு பிரிவினரும் தாக்கி கொண்டனர்.

    இதற்கிடையில் ஒருதர ப்பினர் இந்த தாக்குதலை கண்டித்து மறியல் செய்தனர்.

    தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இரவு பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு வந்த போலீஸ் சூப்பிபரண்டு சக்தி கணேஷ் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . பெண்ணாடத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் சொந்த ஊரில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
    • போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த நிலையில், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி படித்த தனியார் பள்ளி முன் ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் வேப்பூர் பகுதிகளிலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்டபோலீசார் வேப்பூர் கூட்ரோடு, பெரியநெசலூர், தொண்டாங்குறிச்சி, கழுதூர் உள்ளிட்ட பகுதிகளில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தண்ணீர்பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி சடங்கு முடியும் வரை வேப்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுத்தப்பட்டுள்ளது.

    பண்ருட்டி அருகே 2 தரப்பினர் பயங்கர மோதலால் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டனர்.

    கடலூர்

    பண்ருட்டியை சேர்ந்தவர்கள் கொளஞ்சி, சுரேஷ். இவர்கள் இருவரும் பண்ருட்டி அருகே கடைநடத்தி வருகின்றனர். நேற்று இரவு இவர்களது கடைக்கு பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேர்உணவு சாப்பிட வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரும்தாக்கப்பட்டாதாக கூறபடுகிறது. ஆத்திரமடைந்த பனப்பாக்கத்தை சேர்ந்த 50 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ராசாபாளையத்திற்கு வந்தனர். அங்கு ரோட்டோரத்தில் இருந்த பாஸ்ட் புட் கடை, பானி பூரி கடை மற்றும் வீடுகளையும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர் அந்த வழியாக வந்தவர்களை தடியால் தாக்கினார்.

    இதனால் ராசா பாளையம் கலவர பூமியாக மாறியது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே அதிகளவு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×