search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகம்"

    • “சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்”
    • வீரபத்திரர், “அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்”

    வீரபத்திரர் யார்?

    தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு "வீரபத்திரர்" பற்றி தெரிந்து இருக்கும்.

    என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர்.

    "சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்" என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

    ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், "அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்" தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர்.

    • சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பவுர்ணமி யாகம் நடந்தது
    • விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பௌர்ணமி மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் சந்திராயன் 3 நிலவில் செல்ல காரணமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தியும்,விவசாயம் செழித்து வளரவும், சிறப்பு பிரார்த்தனை செய்ய ப்பட்டது.

    இதில் நாடி செல்வ முத்துக்குமரன், பள்ளி தாளாளர் லெனின்,நாடி குணசேகரன், பொறியாளர் கதிரவன் தொழிலதிபர் ராகேஷ் குமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று நவதுர்கா ஹோமம் நடைபெற்றது.
    • 16-ந் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமம் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நெல்லி த்தோப்பு கோவிலூரில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    தற்போது கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது.

    விழாவில் சத சண்டி மகாயாகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று நவ துர்கா ஹோமம் நடைபெற்றது.

    வருகிற 13-ஆம் தேதி முனீஸ்வரர் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    14-ம் தேதி ஆடிக் கழிவு பெருவிழா நடக்கிறது. 15-ம் தேதி முனீஸ்வரர் படையல் பூஜையும், 16-ம் தேதி விடையாற்றி விழா -சாந்தி ஹோமமும் நடைபெற உள்ளன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை காத்தாயி அடிமை சாமிநாதன் முனையதிரியர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நவ சண்டியாகம் 2 கால யாகபூஜையுடன் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூரில் அமைந்துள்ள கிரிசுந்தரி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி வளாகத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம் இரண்டு கால யாக பூஜையுடன் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீமத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள் ஆதீனம் முன்னிலையில் சப்த சதி பாராயணம் மற்றும் 13 வகையான யாகப் பொருட்கள், பழங்கள், இனிப்பு வகைகள், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நெய்வேத்திய பொருட்கள், மலர் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகள், பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை, யாக குண்டத்தில் சமர்ப்பித்து மகாபூ ர்ணாஹூதி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு அஷ்டபுஜ மகாகாளிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ்சிவன் குருக்கள் ,கோயில் பணியா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • சட்டைநாதர் கோவிலில் கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரமபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது.

    முதல் நாளாக ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி வழிபாடு நடந்தது.

    முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் தொடங்கியது.

    வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க யாகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து தருமபுபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.

    இதில் திருப்பணி உபயதாரர்கள் மார்கோனி, சரண்ராஜ், முரளிதரன், சுரேஷ், மற்றும் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து யாகமும் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோயில் சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்துயாகமும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், முதன்மை செயலாளர் ஆதி நெடுஞ்செழியன், துணை தலைவர் துரை கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன், மைய்யகுழூ உறுப்பினர் காசிராஜன், ரவிக்குமார், லயன்ஸ் கிளப் பொருளாளர் தண்டபாணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமை ப்பு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு சந்திரன் தலத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் துரை கோவிந்தராஜ்

    வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து யாகமும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது.
    • யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும்.

    ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது?

    அவருக்கு பிரகலாதன் நினைவு வந்தது. பக்தியும் ஞானமும் பெற்ற பிரகலாதனின் உயர்வுக்கு ஸ்ரீநரசிம்மர் காரணமாயிருந்தது போல், தமக்கும் அமைய எண்ணினார்.

    சக்ர தீர்த்தத்தில் நீராடினார். அந்த நினைவுகளுடனே நரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானிக்கத் தொடங்கினார்.

    ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானித்தாரே ஒழிய, அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க ஆவல் கொண்டார். தன் வேண்டுதலை சங்கல்பம் செய்து கொண்டு தியானத்தில் இருந்தார்.

    அவரது தவத்தின் பலனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். ஆனால், உக்ரரூபியாக... அவருடைய உக்கிரம் தாங்காது, உலகமே அவதிப்பட்டது. ரோமச முனிவர் மட்டுமல்ல... தேவரும் முனிவரும் சகலரும் நடுங்கினர்.

    இந்த விவரம் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருக்குச் சென்றது. அனைவரையும் காக்க, ஸ்ரீலட்சுமி அங்கே தோன்றினார். தன் கனிவுப் பார்வையினால் ஸ்ரீநரசிம்மரை அமைதிப் படுத்தினார் தாயார்.

    அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது. அன்னையை ஆசையுடன் அருகே அழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டு, தம்பதியாய் தரிசனம் தந்தார் ஸ்ரீநரசிம்மர். பின்னர் யோகத்தில் அமர்ந்து, யோக நரசிம்மராய்க் காட்சியளித்தார்.

    இரு கைகளையும் யோக ஆசனத்தில் அமர்ந்தி, அருகே அன்னை ஸ்ரீலட்சுமியையும் அமர்த்தி அழகுக் கோலம் கொண்டார் ஸ்ரீயோக நரசிம்மர்.

    ஸ்ரீநரசிம்மரின் இந்த யோக தரிசனமே மதுரை ஒத்த கடையில் கோயில் எழக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மலையை ஒட்டி ஒரு குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீயோகநரசிம்மரின் திருக்கோயில்.

    இந்தக் கோயிலில் கொடி மரம் கிடையாது. காரணம் கொடிமரம், கருவறைக்கு மேல் எழும்பும் விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்து அமையும். இங்கே கருவறைக்கு மேல் யானை மலை நெடிதுயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கப்படவில்லையாம்.

    குடவரைக் கோயிலான இங்கே கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும்கூட குடைவரை அமைப்பில்தான் உள்ளது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசி பெஜர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இதற்காகவே இத்தலத்தின் அருகே அமைந்துள்ள திருமோகூரிலிருந்து காளமேகப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார்.

    மேலும், இந்த மலையில் திருவண்ணாமலையைப் போல் பெளர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாகப் படுத்திருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த மலையும் புனிதமாகக் கருதப்படுகிறது.

    இங்கே யோக நரசிம்ம மூர்த்தி, ஆறடி உயர கருவறையில், கருவறை முழுவதுமாக நிரம்பியபடி, இரு கைகளையும் யோக ஆசனத்தில் வைத்து, அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடனும் பிரமாண்டமான உருவில் அருள்பாலிக்கிறார்.

    கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அடர்ந்த காடாக இருந்தது இப்பகுதி. இதனை மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவர் செப்பனிட்டு கோயில் திருப்பணி தொடங்கினார். அவருக்குப் பின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவர் கி.பி.770இல் கோயிலை முழுதாக்கி குடமுழுக்கிட்டதாக இங்குள்ள கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. அண்மைக் காலத்தில் மீண்டும் செப்பனிட்டு கோயில் அழகுறக் காட்சி தருகிறது.

    சிவன் கோயில்களைப் போல இங்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும். எதிரிகள் பயம் இருக்காது. மரண பயம் அகலும்.

    தாயார் நரசிங்கவல்லியை வேண்டினால் திருமணத் தடை நீங்கும். திருமணம் நடந்தும் கணவன் மிகவும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் நடப்பவனாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் கோபம் நீக்கி, அமைதி தவழும் இல்வாழ்க்கைக்கு வித்திடுவார் ஸ்ரீயோக நரசிம்மர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவேதான் இங்கே நரசிம்ம பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர்.

    • ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குணமடைய வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே காரை மேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வளாகத்தில் ராஜேந்திரா சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.

    மேலும், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் மகா யாகம் வளர்க்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாடிமுத்து, செந்தமிழன், பொறியாளர் மாமல்லன் செய்திருந்தனர்.

    • உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
    • மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடந்தது.

    யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகளுடன்ருத்ர மகாயாகம் வேதநாயகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.

    பின்னர் மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனையும் முடித்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடந்தது
    • சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் சேலைகள், மிளகாய் வத்தல்கள் இடப்பட்டன. பின்னர் பல்வேறு வகையிலான மூலிகைகள், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்து புனித நீரால் விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன், முருகப்பெருமான், பிரத்தியங்கரா தேவி, கால பைரவர், கருப்புசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • உலக நன்மை வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடைபெற்றது.
    • 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள வதான்யேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் அருளாசியுடன் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சண்டி யாகம் நடைபெற்றது.

    இந்த யாகம் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் கோவில் குருக்கள் பாலச்சந்தர் சிவாச்சாரியார் முதலில் கோமாதா பூஜை, 2-வது குதிரை பூஜை, 3-வது ஒட்டக பூஜை செய்தார்.

    பின்னர், செவ்வாழைப்பழம், விளாம்பழம் உள்ளிட்ட 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பிரம்மச்சாரியர்கள், 9 கன்னிகா பூஜைகளும், பைரவருக்கு வடுக பூஜைகளும் நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×