search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருசடி"

    • சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 67). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகே குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அந்தோணியார் குருசடி உள்ளது.

    இதில் சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குருசடி பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. உடனே பெஞ்சமின் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பெரியவிளையை சேர்ந்த வின்சென்ட் மகன் ஸ்டாலின் (43) அங்கிருந்த 2½ மற்றும் ஒரு அடி உயர சிலைகளை உடைத்து சேதப்படுத்தி, அங்கு வைத்திருந்த உண்டியலையும் பணத்துடன் எடுத்துச் சென்று விட்டான். இதுகுறித்து பெஞ்சமின் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது
    • குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியில் கோயிக்கல் தோப்பு புனித தோமையார் ஆலயம் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் ஆலயத்தின் முன் உள்ள மாதா குருசடியில் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது மாதா சொரூபத்தில் தங்க நகைகளை அணிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது.இதனை கண்டு சந்தேக மடைந்த பெண்கள் ஆலய பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து பார்த்தபோது குருசடியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு சொரூபத்தில் அணி விக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு சவரன் தங்க சங்கிலி மற்றும் மூன்று மோதிரங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    அதே நேரத்தில் மாதாவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த தங்க பொட்டு மற்றும் தாலி சுட்டிகளை திருடர்கள் எடுத்து செல்லாமலும், குருசடியின் கீழ் உள்ள காணிக்கை பெட்டியை எடுக்காமலும் சென்றிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பங்கு தந்தை நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் வந்து குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அங்குள்ள காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    யாரோ மர்மநபர்கள் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • உயர்மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி மின் விநியோகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளமடம் பீடரில் ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் ஞானதாசபுரம் பகுதி உயர்மின்னழுத்த பாதையில் நாளை (5-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஈசாந்தி மங்கலம், நாவல்காடு மற்றும் ஞான தாசபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஆரல்வாய்மொழி மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த ப்பாதையில் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குருசடி, தேவசகாயம் மவுண்ட், மங்கம்மாள் சாலை பகுதி களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    6-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காமரின் ஸ்கூல், நெசவாளர் காலனி, வேதாத்ரி நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவல்களை பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×