search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர்கள்"

    • கல்வி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்
    • சுமூக தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து போராட்டம் நடத்திய போது கல்வி அதிகாரிகள் சிலர் எங்களை ஆபாசமாக திட்டினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் சுமூக தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாள ர்களுக்கும் மாதத்தின் முதல் தேதி அன்று ஊதியம் வழங்க வேண்டும். மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தின ஊதியம் ரூ.707 ஆக வழங்க வேண்டும்.

    480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி, குடிநீர் வழங்கல், தெருவி ளக்கு பராமரிப்பு ஆகிய வற்றை ஒப்பந்த முறையில் தனியார் இடம் கொடுக்க வகை செய்யும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • வத்தலக்குண்டுவில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பாக வத்தலக்குண்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இரும்பு தட்டு, மண்வெட்டி உள்பட சுகாதார தளவாடபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.

    செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், தி.மு.க. நகர செயலாளர் சின்னதுரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சிவா, மகாமுனி, அழகுராணி மற்றும் லயன்ஸ் கிளப் டாக்டர் அண்ணாதுரை, நிர்வாகிகள் செந்தில்குமார், ஆண்டவர், முரளி, சக்திவேல் ,நாகேந்திரன், பேரூராட்சி மேஸ்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர்.
    • மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கும்பகோணம்:

    பருவமழை தொடங்கு வதை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி பகுதியிலுள்ள 48 வார்டு களிலும் ஒருங்கிணைந்த டெங்கு தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில், மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தெருக்கள் மற்றும் காலிமனைகளில் மாநகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர். அந்தவகையில் மொத்தம் 2 டன் எடையுள்ள டயர்கள் சேகரித்து அகற்றப்பட்டன.

    இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பழைய டயர்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்களை அகற்ற வேண்டும். அப்போது தான் டெங்கு போன்ற காய்ச்சல் வருவதை தடுக்க முடியும். வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×