என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் டிரைவர் தாக்குதல்"
- வாலிபர் ஹெல்மெட்டால் டிரைவர் நந்தகுமாரை தாக்கினார்.
- ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராயபுரம்:
திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகர பஸ்(எண்1) சென்று கொண்டிருந்தது. டிரைவராக திருவொற்றியூர்,கலைஞர் நகரை சேர்ந்த நந்தகுமார் இருந்தார்.
ராயபுரம்,எம்.எஸ். கோவில் அருகே பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் செல்போனில் பேசியபடி வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனை டிரைவர் நந்தகுமார் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஹெல்மெட்டால் டிரைவர் நந்தகுமாரை தாக்கினார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய கொடுங்கையூர் ஆண்டாள் நகரை சேர்ந்த ஐ.டி.ஊழியரான ஜெகநாதனை(21) கைது செய்தனர்.
- பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள்.
- கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக பார்த்தி (30), கண்டக்டராக கிருஷ்ணன் (29) ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த பஸ் பேரம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுமா விலங்கை பகுதியில் பஸ்சை 4 பேர் வழிமறித்தனர்.
அவர்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்து வகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் சந்திப்பில் பஸ் வந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென பஸ்சை வழிமறித்தனர்.
- அவர்கள் பஸ்சுக்குள் ஏறி “எங்களுக்கு வழிவிட மாட்டாயா” என்று கேட்ட படி டிரைவர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மாநகர பஸ் (எண் 70சி) புறப்பட்டு சென்றது. பஸ்சை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த டிரைவர் மணிவண்ணன்(35) ஓட்டினார். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் சந்திப்பில் பஸ் வந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென பஸ்சை வழிமறித்தனர்.
அவர்கள் பஸ்சுக்குள் ஏறி "எங்களுக்கு வழிவிட மாட்டாயா" என்று கேட்ட படி டிரைவர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தாக்கிய சதீஷ் குமார், அஜய், சந்துரு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்