என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளத்தொடர்பு"

    • திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    • கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவ ருக்கும் திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரையும், பிள்ளைகளையும் விட்டு சென்று விட்டதாக விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரின் மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் உள்ளிட்டவர்கள் தம்மை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்ற தனது 7 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் வந்து முனியம்மாள் புகார் அளித்தார்.

    • திருமணமான பெண்ணுடன் பழக்கம் வைத்த ஷவர்மா கடை உரிமையாளரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

    திருச்சி:

    சேலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசி (வயது 45). திருமணமான இவர் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் சிக்கன் ஷவர்மா கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்காக அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் சசிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அந்த பெண்ணை கரூருக்கு வரழைத்தும், சசி கொடுமுடிக்கு சென்றும் அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கொடுமுடியில் இருந்து நேற்று கரூர் வந்தனர். பின்னர் அவர்கள் சசி நடத்திவரும் ஷவர்மான கடைக்கு சென்றனர். வாடிக்கையாளர்கள் வருவதாக நினைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் சசியை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராமல் கடையிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். அதன் பின்னர் மேற்குமாட வளாகம் தெரு வழியாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சாலையில் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் அவரை தரதரவென இழுத்துச்சென்றனர்.

    இதில் சசிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

    இதனை சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

    திருமணமான பெண்ணுடன் பழக்கம் வைத்த ஷவர்மா கடை உரிமையாளரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார்.
    • விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகேஸ்வரி (44). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ் (39) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரியின் தம்பி கருப்புச்சாமி (36) என்பவர் தனது சகோதரியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். சுரேஷையும் தனியாக அழைத்து இனிமேல் தனது அக்காவை பார்க்க வரவேண்டாம் என கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

    இதனையடுத்து சுரேஷை கொலை செய்ய கருப்புச்சாமி முடிவு செய்தார். மது பழக்கம் கொண்ட சுரேசுக்கு விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய முடிவு செய்தார். ஆனால் தான் அழைத்தால் சுரேஷ் வரமாட்டார் என நினைத்து அவரது நண்பரான மணிமாறன் (25) என்பவரை உதவிக்கு அழைத்தார்.

    சுரேசுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்குமாறு மணிமாறனிடம் கருப்புச்சாமி கூறினார். அதன்படி கடந்த 3ம் தேதி மதுகுடித்து பின்னர் வாந்தி எடுத்த சுரேஷ் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுவில் விஷம் கலந்திருந்தது குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த மகேஸ்வரி தனது காதலன் இறப்பில் மர்மம் இருப்பதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார். விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த மதுபாட்டிலை சுரேசுக்கு கொடுத்துவிட்டு விஷம் இல்லாத மதுவை தான் குடித்துள்ளார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயக்கமடையவே அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது உறுதியானது.

    இதனை தொடர்ந்து கருப்புச்சாமி மற்றும் அவரது நண்பர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

    • சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர்.

    மனிதர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி தீர்க்க கோபத்தின் உச்சத்தில் ஏதேதோ செய்வார்கள். ஆனால், பீகாரில் ஒருவர் காதலனுடன் ஓடிச்சென்ற மனைவியை பழி தீர்க்க வினோத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ரூபிக்கு முகேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீரஜூக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய ரூபி தனது கள்ளக்காதலன் முகேஷூடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நீரஜ், தனது மனைவியை முகேஷ் கடத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார்.

    மேலும், இந்த விஷயத்திற்கு முடிவுகட்ட நீரஜ் பஞ்சாயத்தை கூட்டினார். ஆனால், பஞ்சாயத்திற்கு இணங்க மறுத்த முகேஷ், ரூபியுடன் அன்றே ஊறைவிட்டு வெளியேறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், மனைவி ரூபியை பழிவாங்குவதற்காக, முகேஷின் மனைவியான அதே பெயரைக் கொண்ட ரூபி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீரஜூம் ரூபியும் திருமணம் செய்துக் கொண்டனர். முகேஷூக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த வினோதமான திருமணங்கள் பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

    • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
    • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

    இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

    • ஆறுமுகம் மற்றும் கவிதா இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர்.
    • ஆறுமுகம் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் பட்டாணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தார். இதேபோல விருத்தாசலம் அருகேயுள்ள முருகன்குடியை சேர்ந்த கவிதா (28). இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர். ஆறுமுகத்தின் பட்டாணி கடைக்கு உளுந்தூர்பேட்டை பு.கிள்ளனூரை சேர்ந்த வைத்தி (55) அடிக்கடி வந்து சென்றார். இதில் வைத்திக்கும், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை ஆறுமுகம் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வைத்தியும், கவிதாவும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கவிதா தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக ஆறுமுகத்திடம் கூறிச் சென்றார். ஆனால், அவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள வைத்தி வீட்டில் சென்றது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகம் கவிதாவை எரித்துக்கொல்ல முடிவெடுத்து பெட்ரோல் பாட்டிலுடன் உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். அங்கு வைத்தியின் வீட்டில் இருந்த கவிதாவின் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். அங்கிருந்த வைத்தி பாட்டிலை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஆறுமுகம் முற்றிலும் எரிந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் வைத்திக்கும் லேசான தீக்காயங்களுடன் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் கவிதா, வைத்தி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார்.
    • சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது.

    இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர்.

    இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் பெட்ரோல் பங்க் ஊழியர்.
    • தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் 21, பெட்ரோல் பங்க் ஊழியர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    கள்ளக்காதல் தகராறு

    அரவிந்த் தனது நண்ப ரான திருமலைகிரியை சேர்ந்த மனோஜ்குமார் என்ப வரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் அரவிந்த்குமார் மனைவியு டன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தனி மையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த மனோஜ்குமார் அரவிந்தை கண்டித்தார்.

    ஆனால் அதனை கண்டு கொள்ளாத இருவரும், தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதையடுத்து மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 18-ந் தேதி அரவிந்தை மறை வான இடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் சர மாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே இது தொடர்பாக விசாரணை நடத்திய கொண்ட லாம்பட்டி போலீசார் கொலையில் தொடர்புடைய மனோஜ் குமார் மற்றும் அவருடையை நண்பர்கள் ராமச்சந்திரன் 26, கார்த்திக் 21, ரத்தினம் 33, கவுரி சங்கர் 30 ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கைதான மனோஜ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    அரவிந்த் , எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அர விந்துக்கும், எனது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது . இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இது தொடர்பாக அவர்களை கண்டித்த போதும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அரவிந்தை தனது நண்பர்க ளுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

    அதன்படி நண்பர்கள் உதவியுடன் திட்டமிட்டப்படி அரவிந்தை பெரியபுதூர் காட்டுப்பகுதிக்கு அைழத்து சென்றோம். அங்கு வைத்து எனது மனைவியுடன் பேசக்கூடாது, தனிமையில் சந்திக்க கூடாது என்று கூறினோம். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்க வில்லை.

    ஆணி பதித்த கட்டை

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஆணி பதித்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினோம், இதில்நிலை குலைந்த அரவிந்த் உயிர் பிழைக்க அங்கிருந்து சிறிது தூரம் ஓடினார். பின்னர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரத்தில் வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஷில்பா கடும் மன வேதனை அடைந்தார். மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.

    இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் சோட்கி இப்ராடிஹிம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தண்டனை அளிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் மும்பையில் வேலை பார்ப்பதாகவும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் தொடர்பில் இருந்த ஆணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதாக விசாரணை தெரிய வந்துள்ளது

    இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில், அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலைமுடி வெட்டப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தண்டனை வழங்கியபோது அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    காவல் நிலையப் பொறுப்பாளர் நந்த் லால் சிங் அளித்த புகாரின் பேரில், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து விவாகரத்து கேட்ட மனைவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண், கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கடந்த 3 மாதங்களாக தாயுடன் வசித்து வந்தார். கணவர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அப்பெண் கண்டுபிடித்தாள்.

    அப்பெண் தாய் வீட்டில் இருந்த போது, நேற்று முன்தினம் அங்கு வந்த அந்த நபர் மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    • இந்தி நடிகை ரூபாலி கங்குலி 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வின் வர்மாவை திருமணம் செய்தார்.
    • எனது அப்பாவிற்கும் ரூபாலி கங்குலிக்கும் முறைகேடான முறையில் குழந்தை பிறந்ததாக மகள் குற்றச்சாட்டு.

    அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ரூபாலி கங்குலி. இவர் 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வின் வர்மாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டே ருத்ரன்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

    அஷ்வின் வர்மா ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அஷ்வின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சப்னா வர்மா என்ற பெண்ணை 1997ல் திருமணம் செய்தார். பின்னர் சப்னா வர்மாவை 2008 ஆம் ஆண்டு அஷ்வின் விவாகரத்து செய்தார்.

    அஷ்வினின் 2 ஆவது மனைவியின் இளைய மகளான ஈஷா வர்மா அவரது தந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    எனது தந்தை அஷ்வின் வர்மா என அம்மாவுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்திலேயே 12 ஆண்டுகள் ரூபாலியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக ஈஷா வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "என் அம்மா ஒரு அழகான பெண். அவள் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாள். அவள் என் அப்பாவுக்கு தேவையான அணைத்து பணிவிடைகளையும் செய்தார். ஆனால் என் அம்மாவுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்திலேயே ரூபாலியுடன் என் அப்பா கள்ளத்தொடர்பில் இருந்தார்.

    2008 ஆம் ஆண்டு என் அம்மாவிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் எனது அப்பா பிப்ரவரி 6, 2013 அன்று ரூபாலியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 25, 2013 அன்று ருத்ரன்ஷ் பிறந்தார். எனது அப்பாவிற்கும் ரூபாலி கங்குலிக்கும் பிறந்த மகன் ருத்ரன்ஷ் முறைகேடான முறையில் பிறந்தவர். தங்களது மகன் குறைப் பிரசவத்தில் பிறந்து விட்டதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். பிப்ரவரியில் திருமணம் செய்தவர்களுக்கு ஆகஸ்டில் குழந்தை பிறந்துள்ளது. நான் கூறுவதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனக்கான நீதியை பெற நான் நிச்சயம் போராடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×