search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 241038"

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பரோட்டா பிரியர்கள் மத்தியில் ரோட்டுக்கடை கிளி பரோட்டா படு ஃபேமஸ்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார். இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.

    தேவையான பொருட்கள்

    வெஜிடபிள் சால்னா - 2 கப்

    பரோட்டா - 2

    வாழை இலை - 1

    நறுக்கிய வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.

    பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.

    இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.

    பின்பு அதன் மேல் மீண்டும் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.

    இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடித்து நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.

    இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

    இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான வாழை இலை கிளி பரோட்டா தயார்.

    • ஹோட்டலில் இந்த பரோட்டா வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 500 கிராம்

    தயிர் - 3 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    முட்டை - 2

    உப்பு - தேவையான அளவு

    கொத்துக்கறி மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

    கொத்துக் கறி - 500 கிராம்

    பெரிய வெங்காயம் - 2

    பூண்டு - 4 பல்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி

    செய்முறை:

    கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

    மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

    பரோட்டா செய்முறை:

    மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

    முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.

    மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக தேய்க்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.

    கொத்துக்கறி மசாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி.

    • குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்..

    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 2

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 8 பல்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    * அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

    * 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    * சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

    * இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    ×