search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருட்டு"

    • காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • தேசிய ெநடுஞ்சாலையில் போலீசார் ரோந்து

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜமீன் பகுதியில் கடந்த 16-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணைகள் அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த விஷால் வயது (18) என்பதும், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்பாடியில் இருந்து 2 பைக்களை திருடி வந்ததும் தெரியும் வந்தது. இதனைத் தொடர்ந்து விஷாலை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் சிறுவர்கள் சீர்திருத்தம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் நேற்று காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. வீட்டு முன் நிறுத்தப்பட்டி ருந்த பைக் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சசிகுமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பைக் தொடர்பாக சோளிங்கர் தாலுகா ஆயல் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 21)என்பவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டிஎஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் நேற்று இரவு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக பைக்கில் வந்த வாணியம்பாடி டவுன் வி.எஸ்.கே. நகர் சேர்ந்த மாதவன் வயது (20) என்வரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது ஆம்பூர் சுற்று புற பகுதியில் கடந்த சில நாட்களாக மாதவன் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சாலையில் நிறுத்திவிட்டு சந்தை வளாகத்திற்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அகரம்சேரி அடுத்த காளப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49), கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் பள்ளிகொண்டா சர்விஸ் சாலையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சந்தை வளாகத்திற்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து மகேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியிருப்பு அருகே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்(வயது30).

    இவர் திருப்பத்தூரில் ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தனது பைக்கை நிறுத்தினார். பின்னர் பணிக்குச் சென்றார்.

    மீண்டும் இன்று காலை அங்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கை திருடி சென்றுள்ளனர்.

    இதையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனை சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புது கேசவரம் சோதனைச் சாவடியில் அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை

    சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தக்கோலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 19), சஞ்சீவி (37) என்பதும் அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்களிடமிருந்து 4 பைக்குகளை போலீசார்

    பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிப்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50) இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தனது பைக்கை பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

    மீண்டும் வேலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது தனது பைக் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
    • இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் சத்யாநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடைக்கு வந்த ஒரு மர்ம கும்பல் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடைக்குள் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.20000 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதில் வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.

    இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பைக் மற்றும் பணம் திருடு போனது குறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர் விட்டுச் சென்ற பைக் அவர்களுடையதா அல்லது அதுவும் திருடி எடுத்து வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினர்
    • வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் கிஷோர் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை வெளியே வந்து பார்த்த போது பைக் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மழையூர் கூட்டுச் சாலையில் சப் -இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கினர்.

    அப்போது பைக்கின் பின்னால் வந்தவர் தப்பி யோடி விட்டார். பிடிபட்ட வரிடம் விசாரித்தபோது சேத்அஜீஸ் (30) என்பதும் வடவணக்கம்பாடி பகுதியில் கிஷோரின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்அஜீசை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீசை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்ம கும்பல் பைக்குகளை திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இது குறித்து அதிக அளவில் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் தனது பைக்கை கந்தனேரியில் உள்ள மணல் குவாரி அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிகொண்டா பகுதியில் இதேபோல் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    திருட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லாக்கை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது21). இவர் ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மெக்கா னிக்காக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஸ்ரீதர் தனது பைக்கை வழக்கம்போல், ரங்காபுரத்தில் உள்ள கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அங்கிரு ந்த கடை ஊழியர்களுடன் அருகிலுள்ள்ள பகுதிகளில் பைக்கை தேடினார்.

    அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு தள்ளி சென்றதை பார்த்தனர். உடனடியாக 2 பேரையும் பிடித்து சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் ஓட்டேரி அடுத்த குளவிமேட்டைச் சேர்ந்த சிபிராஜ் (21) மற்றும் சத்துவாச்சாரியைச் சேர்ந்த யுவராஜ் (23) என்பதும் தெரியவந்தது.

    இதில் சிபிராஜ் மீது ஆந்திர மாநிலம் பாகாலா, காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சைக்கிள், பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சாலையோரம், கடை வீதிகள், பூங்கா மற்றும் வீடு அருகே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன. அதிலும் குறி வைத்து புத்தம் புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

    இந்தநிலையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பிடிபட்டவர்கள் சிதம்பரம் கே.என்.தோட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 19), உசுப்பூர் நாயகபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற தமிழரசன் (19) என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இவர்களில் தமிழரசன் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் மேலும் 8 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்தது உள்பட மொத்தம் 9 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×