search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு"

    • மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும்.
    • விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன.

    விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது. விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.

    இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன. ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள். விளக்கை நன்கு தேய்த்து துடைத்து பின்பு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன. எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.

    சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்க ளையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்-மனைவி யரிடையே அன்பு நீடித்தி ருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய் யால் விளக்கேற்ற வேண்டும்.

    தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.

    குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காக வும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும், எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.

    பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம். வாழைத்தண்டில் இருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.

    இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டில் இருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும். புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும். மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும். பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.

    மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்க லாம். திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்று, அதனடியில் இரண்டு, கீழ்ப் பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப்பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள். அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும். விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது. இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரடையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம். விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.

    திருவிளக்கிலே தேவி உறைகின்றாள். விளக்கை வழி படுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம். அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப்பெற திருவிளக்கு பூஜை எளிமையானது. திருவிளக்கை அணைக்கும் பொழுது ஒரு துளி பாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம். குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.

    • தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.
    • இதனை புனிதமாகக் கருதுகின்றனர்.

    எல்லோர் வீடுகளிலும் ஏற்றப்படும் விளக்கு காமாட்சியம்மன் விளக்கு. மகிமை நிறைந்த மங்களப் பொருட்களில் இதுவும் ஒன்று. எனவே, தான் இதனை புனிதமாகக் கருதுகின்றனர். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. இந்த விளக்கை, சுவாமி பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும். செல்வம் பெருகும். குலம் தழைக்கும்.

    ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாது. அப்படியானவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, 'நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று!' என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அவ்வாறு செய்யும் போது நன்மைகள் மேலோங்கும். மேலும் அப்படி ஏற்றப்படும் தீபத்திற்குப் பெயர் "காமாட்சி தீபம்" என்பதாகும்.

    • வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம்.
    • அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

    *வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.

    * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

    * வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

    * வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம். அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

    * குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்தும் செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

    * 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • வாலிபால் மைதானம், மின்னொளி விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பதை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் ஸ்கேட்டிங் மைதானம், வாலிபால் மைதானம், நடைப்பயிற்சி மேற்கொள்ள பாதை, மின்னொளி விளக்கு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

    பணிகளை விரை வாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ரத்னாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தர்ர.
    • புரட்டாசி மாதம் மட்டுமே பெருமாளுக்கு இந்த ரத்னாங்கி அலங்காரம் சாற்றப்படுகிறது.

    திருப்பூர் :

    புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சுவாமி ரத்னாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தர்ர. வருடத்தில் புரட்டாசி மாதம் மட்டுமே பெருமாளுக்கு இந்த ரத்னாங்கி அலங்காரம் சாற்றப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமையில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் அனுமதி அளிக்கப்பட்டதால் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் விளக்கேற்றி துளசி மாலைகளை வழங்கி பெருமாளை வழிபட்டனர்.

    • ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
    • சுமங்கலி பெண்கள், குழந்தைகள், கன்னிப்பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. திருவையாறு மேலவீதியில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் குங்குமக் காப்பில் அருள்பாலித்தார். சுமங்கலி பெண்கள், குழந்தைகள், கன்னிப்பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை மகா மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

    குத்துவிளக்கு பூஜையை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்துஅருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அன்பளிப்பாக வழங்கப்பட்ட 30 விளக்குகளை ஒரு சாக்கு பையில் கட்டி, கோவில் வராந்தாவில் வைத்திருந்தனர்
    • மூடையில் இருந்த 2 கிலோ எடையுள்ள 18 விளக்குகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ளஅள்ளம் பகுதியில் ஆதிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிளக்கு பூஜைகள் நடத்துவதற்காக பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 30 விளக்குகளை ஒரு சாக்கு பையில் கட்டி, கோவில் வராந்தாவில் வைத்திருந்தனர். நேற்று ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற இருந்ததால் மூடையில் இருந்த விளக்குகளை எடுக்க சென்றனர். அப்போது மூடையில் இருந்த 2 கிலோ எடையுள்ள 18 விளக்குகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக கோவில் தலைவர் சுனேஷ் (வயது 43) புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது 30 விளக்குகளில் எடை அதிகமாக காணப்பட்ட விளக்குகள் சாக்கு மூடையில் அப்படியே இருந்தன. திருடர்கள் கைவரிசை என்றால் அனைத்து விளக்குகளும் திருட்டு போய் இருக்கும் என்பதால் இது தொடர்பாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    உடுமலை :

    மின் பயன்பாட்டை குறைக்க மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 12,008 எல்.இ.டி., 1,200 சி.எப்.எல்., 627 டியூப் லைட், 36 சோலார், 1 சோடியம், 1 மெர்குரி, 11 ைஹமாஸ் என13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏதேனும் பாதிப்பு அல்லது பழுது ஏற்பட்டால் அவைகள் புதிதாக மாற்றப்படுகின்றன. இதற்கான உதிரிபாகங்களும், ஊராட்சி நிதியில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பழுதானால் அதற்குரிய புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகள் புதிதாக எல்.இ.டி., விளக்குகள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்புதல் கடிதமும் அந்தந்த ஊராட்சிகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த தடை உள்ளது.இதனால், கிராமங்களில் விளக்குகள் பழுதானால் சீரமைக்கும் வரை அப்பகுதி இருள் சூழந்தே காணப்படும். அரசின் இந்த உத்தரவு அதிகாரிகளை குழப்பம் அடையச்செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×