என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவப்படிப்பு"
- அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் மேஜைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் அருகிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் வழங்கும் விழா தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
சேத்தூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், குடிநீர்த் தொட்டி மற்றும் மின் விளக்கு, மின் விசிறி வசதி மற்றும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் மின் விளக்கு , மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும் என்றும், கல்வி அலுவலரிடம் பேசி விரைவில் ஆண்டு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசிய எம்.எல்.ஏ., முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதன்விளைவாக மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி வளர்ச்சி பெற்று மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் நமது முதல்வர்.
அனைத்து துறையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். அதற்கு முதல்வர் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பார் என்றார்.
விழாவில் தலைமை ஆசிரியர்கள் சுந்தரராஜன், சிவகுமாரி, தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரிமாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்