என் மலர்
நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு"
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
உடுமலை
உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 37) என தெரியவந்தது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
- லாட்டரி சீட்டு விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்
- பாலக்கரை, காந்தி மார்க்கெட் பகுதிகளில்
திருச்சி:
திருச்சி மாநகரில் பல இடங்களில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவு நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் மற்றும் திருச்சி சிறப்பு தனிப்படையுடன் இணைந்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்கி உள்ளனர்.அந்த லாட்டரி சீட்டில் பணம் கிடைத்துள்ளது. பணத்தை தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து மேற்கண்ட இரண்டு வாலிபர்களையும் மிரட்டி அவர்களிடமிருந்து ரூபாய் 5000 பணத்தை பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர்.
இது குறித்து இருவரும் தனித்தனியாக காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் காந்தி மார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் லாட்டரி சீட் விற்பனை செய்யும் கும்பல் பிடிப்பட்டது. இவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி காந்தி மார்கெட் மற்றும் பாலக்கரை பகுதியில் டீக்கடை அருகில் 3 நம்பர் லாட்டரி மற்றும் ஆன்லைன் லாட்டரி தொடங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்பட போலீசார் லாட்டரி சீட்டு விற்றவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார் (வயது 40), இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22), விஷ்ணு ( 23), பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத் (24), கர்நாடகாவை சேர்ந்த ஆரோக்கியசாமி (20), திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (37)என்பது தெரிய வந்தது. மேற்கண்ட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
- வீட்டு வாசலில் வைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
- கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநில லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்
உடுமலை :
உடுமலையையடுத்த ஆர்.வேலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆர்.வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணசாமி என்பவரது மகன் ஜெயகிருஷ்ணன்(வயது 50) என்பவர் வீட்டு வாசலில் வைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் கயிறான் என்ற கதிரான்(வயது 62) என்பவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநில லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
- இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (46). இவர், கரூர் மெய்ன்ரோட்டில் உள்ள சோலார்பகுதியில், பாஸ்ட் புட் கடை ஒன்றின் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு நபர் அவரிடம், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து, உமா மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு லாட்டரி விற்பனை செய்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சோலார் புதூர், பாலுசாமி நகரைச் சேர்ந்த சண்முகராஜா ( 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
எடப்பாடி:
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, சமுத்திரம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (49) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கிராமப் பகுதி மக்களிடம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1100 மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .
ஈரோடு:
ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெருந்துறை ரோடு, சஞ்சய் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த அசோக் (48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சூரம்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளை தாளில் எழுதி நிச்சயம் பரிசு விழும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது
- முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான தனி படை, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி காந்தி ரோடு அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தனது 2 சக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தளர். பின்னர் முகமது உவைஸ் மீது வழக்கு பதிவு செய்துஅவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த தேன்கனிக்கோட்டை பிரசாந்த் தெருவை சேர்ந்த சந்துபாஷா (வயது 35), பை-பாஸ் சாலை பகுதியை சேர்ந்த பாரூக் பாஷா (48), ஆகிய 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பணம் ரூ7ஆயிரத்து 230யை பறிமுதல் செய்தனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tiruvannamalai News Lottery ticket seller arrestசேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 53) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
- போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்
பல்லடம் :
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்லடம் பகுதியில் சமூக வலைதளம் மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாடு அரசால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் லாட்டரி சீட்டுகள் படங்கள் வெளியாகியும், உளவுத்துறை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், அவர்களின் ஆதரவோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
- 3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது.
இதில் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டன் ஜாக்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் சூதாட்டத்தை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த காட்டன் சூதாட்டம் விற்பனை மதியம் 1.30 மணிக்கு மேல் தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.
அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அவர்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அந்த சூதாட்டம் நடக்கும் தெருவில் சென்று லாட்டரி சீட்டுகளை அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாக மாறி மாறி எழுதி விட்டு செல்கின்றனர்.
சூதாட்ட கும்பல் தங்களிடம் எழுத வரும் நபர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணத்தை கட்டணமாக பெற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் காட்டன் சூதாட்டம் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
"அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் குதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், 3-ம் நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது 2 எண்கள் எழுதித்தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள் நாம் சொன்ன எண் தேர்வாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் என்பதால் பலரும் 35, 44. 55 என 10 முதல் 20 விதமான இரட்டை இலக்க எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடுவார்கள்.
இதில் ஒப்பன், குளோஸ் என மற்றொரு வகை உள்ளது. ஓப்பன் என்றால், 2 எண்களில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு எண்ணை சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4-ம் எண் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள்.
அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம் 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும்.
நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100. 500 கூட கட்டலாம். பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள் 3-ம் நம்பர் லாட்டரி என்பது, ஒரு எண்ணுக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த எண்ணை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள். S6 என 2 எண்கள் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.
100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால். எழுதும் புரோக்கருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பஸ் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
3-ம் நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டரம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணைசெய்தனர்.
அதில் அவர் திருப்பத்தூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 42)லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.