search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    இதற்கிடையே, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தடைந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில், 234 தொகுதி நிர்வாகிகளுடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தார். இதன் பின்னர், விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

    • லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
    • விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.



    இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.

    • விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இதனை பாராட்டும் வகையில் விஜய் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில் சரவணன் செய்த பணிகள் குறித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், அவரது சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் எழுதிய கடிதம் அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

    • அனைத்து மாணவர்களையும் தனித்தனியாக சந்தித்து நடிகர் விஜய் விருதுகளை வழங்கினார்.
    • இறுதியில், வாரிசு ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.

    சென்னை:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இறுதியில், வாரிசு ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.

    • மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.
    • விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    மாணவ- மாணவிகளுக்கு பரிசளித்த விஜய்

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவர், "தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும். நாங்கள் போடும் முதல் வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்றி தரவேண்டும். அந்த வாக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு படமும் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறது. ஒரு வாக்கு எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் படத்தில் காண்பித்திருப்பீர்கள் அது எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது" என்று கூறினார்.

    • நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்

    இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • சென்னையில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
    • இதில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அரசியலுக்கு நான் வருவேனா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது" என்று கூறினார்.

    • நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.



    விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

    விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.

    • நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியானது சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    இந்நிலையில், விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த ஒரு மாணவியின் பெற்றோர் கூறியதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர் வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவது மிகவும் நல்ல விஷயம். தமிழ்நாட்டில் இந்த மாதிரி நல்லவர்கள் வந்து தமிழகத்துக்கு முன்னேற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.

    நடிகர் விஜய் கல்விக்காக முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வரட் டும். வந்தால் நல்லதுதான். இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் நாளை சந்திக்கிறார்.
    • இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.

    இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து இந்த சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நாளை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

    நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

    இது பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:-

    மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் வந்து தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை அடைந்து விடுவார்கள்

    அனைவருக்கும் சினாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • நடிகர் விஜய் 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார்.
    • மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    தற்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். அப்பொழுது 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×