search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டங்கள்"

    • அ.தி.முக. பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா.
    • திறப்பு விழா திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரத்தில் கோட்டூர் தெற்கு, வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது, ஆகஸ்ட் 15ம் தேதியை பிரதமர் பழங்குடி தினமாக அறிவித்துள்ளார். இது நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. நமக்கு இதுதான் சமத்துவம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அ.திமுக., பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா. ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் ஆட்சியை சிறப்பாக நடத்தினார். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றினார். மக்களுடைய தேவையான திட்டங்களை இன்றைக்கு திமுக புறக்கணிக்கிறது. இன்றைக்கு நடைபெற்ம் திறப்பு விழா திட்டங்கள் எல்லாமே அ.திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். மக்கள் நமக்கு ஆதரவை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பொதுக்கு–ழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடியார் அணிக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்க–ப்பட்டது. மாவட்ட செயலாளரை இடைக்கால பொது–ச்செயலாளர் கழகத்தின் அமைப்பு செயலா–ளராக அறிவித்ததற்கு பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் டாக்டர்.கோபால், சிவா.ராஜமாணிக்கம், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், அவைத் தலைவர் சுப்பிரமணியன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா சேட், அவைத்தலைவர் கண்ணன், தகவல் தொழில் நுட்ப ஒன்றிய அணி செயலாளர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. எனவே அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் என்ன? அரசு அறிவித்த திட்டங்கள் எவை? என்று எங்களுக்கு தெரியாததால் எங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரின் கேள்விக்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜா, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை இனிவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என கூறினார்.

    முடிவில் மேலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு சொல்லவில்லை என பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
    • மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு பா.ஜனதா பொருளாதாரப் பிரிவின் மாநிலத்தலைவர் எம்.எஸ்.ஷா இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலுடன் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள், திட்டங்களை செயல்படுத்தவில்லை. எனவே தமிழகம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி உள்ளது.

    இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. மின் கட்டணத்தை மாற்றியமைக்க மட்டுமே கூறியது. ஒவ்வொரு மாநி லங்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் செய்ய முடியாத சாதனைகளை- பிரதமர் மோடி செய்து வருகிறார். அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்து உள்ளது ஆனால் மாநில அரசு வரியை குறைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்த ரூ.1.50 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகளை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வரை உள்ள சாலையை விரிவுபடுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இந்த பகுதியில் கழிவு நீரோடை சீரமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல வசதியாக நடை பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இனி கார் பார்க்கிங் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    மேலும் இந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான நட வடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. அலங்கார விளக்குகளும் அமைக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் இருந்து வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலையை மேம்படுத்த ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இருவழி சாலையாக மாற்றப்படுவதுடன் கழிவுநீரோடையும் சீரமைத்து அலங்கார விளக்குகள் அமைப்ப தற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகாம்களில் குளங்களில் இருந்து கரம்பை எடுத்தல் மற்றும் வேளாண்துறையின் சகோதரதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
    • விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் பொது சேவை மையம் , இதர கணினி மையங்களில் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரத்தில் 2021-2022-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களான செய்துங்கநல்லூர், வல்லகுளம், சேரகுளம், கீழ வல்லநாடு ஆகிய கிராமங்களில் வேளாண்துறை மற்றும் அனைத்து சகோதரதுறை பங்களிப்போடு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இக்கிராமங்களில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் கடன் அட்டை மற்றும் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு பயனாளிக்கு தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேற்படி முகாம்களில் குளங்ககளில் இருந்து கரம்பை எடுத்தல் மற்றும் வேளாண்துறையின் சகோதரதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.

    தற்போது மேற்குறிப்பிட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 4 கிராமங்களின் அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் பயனாளிகளை விடுதலின்றி திட்டத்தில் இணைத்திட அரசு அறிவித்துள்ளது.

    எனவே செய்துங்கநல்லூர், வல்லகுளம், சேரகுளம், கீழ்வல்லநாடு கிராமங்கிளில் உள்ள விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் பொது சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இதர கணினி மையங்களில் பிரதமரின் கவரவ நிதி திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம். இத்தகவலை கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் 60 சதவீத நிதியில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய இணை மந்திரி கபில்மோரேஸ்வா் பாட்டீல் ராமநாதபுரம் வந்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்ற 77 பயனாளிகளை சந்தித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பா.ஜனதா மாவட்டத் தலைவா் கதிரவன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர் கபில்மோ ரேஸ்வா் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாா்த்து பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது.

    நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயிா்நீா்த் திட்டம், தூய்மை இந்தியா கழிப்பறை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏரா ளமானோா் பயன டைந்துள்ள னா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

    தமிழக அரசு தனது நிதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி மூலமே திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×