என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருங்குளம் வட்டாரத்தில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு
- முகாம்களில் குளங்களில் இருந்து கரம்பை எடுத்தல் மற்றும் வேளாண்துறையின் சகோதரதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
- விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் பொது சேவை மையம் , இதர கணினி மையங்களில் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்தில் 2021-2022-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களான செய்துங்கநல்லூர், வல்லகுளம், சேரகுளம், கீழ வல்லநாடு ஆகிய கிராமங்களில் வேளாண்துறை மற்றும் அனைத்து சகோதரதுறை பங்களிப்போடு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கிராமங்களில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் கடன் அட்டை மற்றும் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு பயனாளிக்கு தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி முகாம்களில் குளங்ககளில் இருந்து கரம்பை எடுத்தல் மற்றும் வேளாண்துறையின் சகோதரதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.
தற்போது மேற்குறிப்பிட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 4 கிராமங்களின் அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் பயனாளிகளை விடுதலின்றி திட்டத்தில் இணைத்திட அரசு அறிவித்துள்ளது.
எனவே செய்துங்கநல்லூர், வல்லகுளம், சேரகுளம், கீழ்வல்லநாடு கிராமங்கிளில் உள்ள விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன் பொது சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இதர கணினி மையங்களில் பிரதமரின் கவரவ நிதி திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம். இத்தகவலை கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.