என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீன் விலை உயர்வு"
- சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன.
- பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் இந்த மீன்பிடி தடைகாலம் நீடிக்கிறது.
இதைத்தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் குறைந்த அளவு மீன்கள் விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தன.
சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன. பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்ட நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் மீன் விற்பனை களைகட்டியது.
காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை (கிலோவில்) வருமாறு:-
சங்கரா-ரூ.500, கொடுவா-ரூ.600, பாறை-ரூ.600, இறால்-ரூ.500, கிழங்கா-ரூ.500, ஷீலா-ரூ.600.
இதேபோல், திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வளர்ப்பு மீன்களான கட்லா மீன், கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் உள்ளிட்ட மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்திருந்தது. அதனையும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.
- டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
- மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள்.
ராயபுரம்:
காசிமேட்டில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகும் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகமாகவே காணப்படுகிறது.
பெரியவிசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் குறைந்த எண்ணிக்கையில் செல்வதால் மீன்வரத்து குறைந்து உள்ளது. வஞ்சிரம், வவ்வால், பாறை, களவான் மயில் கோலா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.
வஞ்சிரம் கிலோ ரூ.1300-க்கும், வவ்வால்-ரூ.1000 வரையும் விற்கப்பட்டது. மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் காசிமேடு பகுதியில் வழக்க மான உற்சாகத்துடன் மீன் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, மீன்விலை அதிகமாக உள்ளது. கடுமையான டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
இதனால் குறைந்த அளவு மீன் வரத்து இருப்பதால் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதே நிலைதான் வரும் நாட்களிலும் நீடிக்கும் என்றார்.
காசிமேடு மார்க்கெட்டில் மீன் விலை(கிலோவில்) வருமாறு:-
வஞ்சிரம்-ரூ.1300
கொடுவா-ரூ. 800
வவ்வால்-ரூ.1000
தேங்காய் பாறை-ரூ.800
மயில் கோலா-ரூ.350
சங்கரா-ரூ.500
பர்லா-ரூ.400
கடம்மா-ரூ.400
நெத்திலி-ரூ. 300
இறால், நண்டு-ரூ.350 முதல் ரூ.500 வரை.
- வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர்.
- டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை :
கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்க ளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மீன் வியாபா ரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.
வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர்.
இதனால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்கடத்திற்கு வரும் மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் கடல் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இருந்த போதும் கேரளாவில் இருந்து டேம் மீன்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கடல் மீன் பிரியர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கோவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கடல் மீன்கள் விலை வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்லா ரூ.120-க்கும், ரோகு ரூ.120-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், சிறிய நெத்திலி ரூ.100-க்கும், மத்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்