என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிற்பயிற்சி"
- தொழிற்பயிற்சி சான்று பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்களை பெறலாம்.
- மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மார்ச் 30-ந் தேதி பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையமான முத்துப் பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பத்தி னை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்க ளுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9944887754 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
- தொழிற்பயிற்சி அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்தினர்.
- சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், மாநில செயலாளர் நவநீதன், மாவட்ட தலைவர் தெய்வராஜ், மாவட்ட செயலாளர் நீதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிப்ளமோ, பொறியியல் போன்ற உயர் கல்வியில் கூட அமுல்படுத்தாக 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிலும் பயிற்சியாளர்க ளுக்கு அமுல்படுத்துவது என்பது திறனை பரிசோதிக்க ஏதுவாக இல்லாத நிலை உள்ளது. மேலும் பயிற்சியாளர்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது.
இதனால் சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.
- பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
- தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் நடைபெறுகிறது.
இந்த பிரிவுகளில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-22510001, கைப்பேசி: 94990 மற்றும் 8248738413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
- பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்
திருப்பூர்:
திருப்பூா், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகள், மேம்பட்ட தொழில் நுட்ப படிப்பான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம். ஒரு குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். அரசுப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயின்று இந்தப் பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண்திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாகப் பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஆகவே, விருப்பமுள்ள மாணவ, மாணவியா் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2429201, 04258 - 230307, 04252 - 22334 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
- 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.
இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர், கட்டிடக்கலை படவரைவாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.
மாணவிகள் தொழிற்கல்வி சேர்க்கைக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பஸ் சலுகை வழங்கப்படும்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.
மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் உதவி தொகையுடன் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.
10-ம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ. பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மொழிப்பாடங்களை மட்டும் எழுதி 12-ம் வகுப்பு அரசு சான்றிதழ் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நம்புதாளையில் தொழிற்பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
- இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை மேற்கு பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி தலைமையில் தொழிற்பயிற்சிப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், பாரூக், சித்தி விநாயகம், முத்துசாமி, தாளாளர் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார். இங்கு பள்ளி படிப்பை முடித்த பலருக்கும் இந்த பள்ளி பயனுள்ளதாக இருக்கும் என்று எம்.பி. பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தகவல் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில் மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்–பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்க–கத்தால் ஆகஸ்ட்-2022-ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வழங்கலாம்.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அரசு தேர்வு இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடந்த மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழி காட்டுதல் www.skilltraining.tn.gov.in (http://www.skilltraining.tn.gov.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 04562-252655 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.
- தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.
சேலம்:
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சேலத்திற்கு இன்று வந்தார். அவரை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் வரவேற்றனர் தொடர்ந்து அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு உள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட அவர் தேவையானவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிற் பயிற்சிக்கு வளமான எதிர்காலம் உள்ளது.
தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இதனால் மாணவர்கள் தொழிற்பயிற்சியை சிறப்பாக கற்று அதற்கான வேலை வாய்ப்புகளில் சேர வேண்டும் என்றார். அப்போது அவருடன் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொழிலாளர் நலத்துறை இயக்குனர் வீரராகவர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
- நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத–ரெட்டி விடு–த்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட அரசு , தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான ஓராண்டு , ஈராண்டு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வின் மூலம் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை நிரப்ப நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:- www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.50,-ஐ டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு , ஜி பே, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ , மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வரு–மாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி , மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை , மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750 (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்), மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை.
விருதுநகர், அருப்புக்கோட்டை ,சாத்தூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) , பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ,ஆதார் அட்டை , பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் ஆகியவை ஆகும்.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர்: 04562-294382, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் - 04562-294755 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2022-ம் ஆண்டில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சேர்க்கை ஆணை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சோழவந்தான் அருகே தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் முன்னிலை வகித்தார். துணை பொது மேலாளர் சுப்பிரமணி வரவேற்றார். 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி ஆகும். பெண்களுக்கு தங்கும் இடவசதியுடன், வெளியூர் மாணவர்களுக்கு பயிற்சி ஊக்க தொகை வழங்கப்படுகிறது என்று கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜோசப் ஜெபராஜ், சவுந்தரியா ஆகியோர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்