என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜசேகர ரெட்டி"
- ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார்.
அப்போது அவரது தந்தை ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சிலைகளை நிறுவினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது முதல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பாப்பரட்டலா மாவட்டம் அட்டை பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலை மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் சிலை முழுவதும் எரிந்து கருகியது.
இதனைக் கண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் சிலைக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.
- இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை கடப்பாவில் இருந்து புலிவேந்தலாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ஒரே ஹெலிகாப்டரில் சென்று ராஜசேகர் ரெட்டி விபத்தில் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒருவருடன் ஒருவர் பேசாமல் இறுக்கமாக இருந்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகு தனது தந்தை இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து விமானம் மூலம் வந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவர் தாயார் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் இருந்த போது அவருக்காக நானும் எனது மகள் சர்மிளாவும் பாத யாத்திரை சென்று ஆதரவு திரட்டினோம். ஆட்சிக்கு வந்த பிறகு ஜெகன்மோகன் அவரது தங்கைக்கு எந்த பதவியும் தராமல் ஒதுக்கி வைத்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதியதாக கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவருடன் சேர்ந்து தெலுங்கானாவில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளோம். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
தங்கையின் திருமணத்தின் போது அவருக்கு செய்யவேண்டிய அனைத்தும் செய்து விட்டோம். தங்கை என்பதற்காக அவருக்கு கட்சிப் பதவி தர இயலாது என்றார்.
இதையடுத்து கட்சி கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.
இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்