search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்"

    • சேவைக் கட்டண வழிகாட்டுதல்கள் அமல்படுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    • 01.04.2021 முதல் 20.06.2022 வரை, சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 537 புகார்கள் பதிவு.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

    ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    சேவைக் கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்குவதாகவும், அது நுகர்வோரின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், அத்தகைய புகார்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 01.04.2021 முதல் 20.06.2022 வரை, 537 புகார்கள் நுகர்வோரால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், சேவைக் கட்டண புகார்களில் முதல் 5 இடத்தில் புது தில்லி, பெங்களூர், மும்பை, புனே மற்றும் காசியாபாத் ஆகியவை உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×