என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செய்யும் பணி"
- குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கொடுமுடி:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த கொள த்துப்பாளையம் கிராமம் கொம்பனைபுதூரில் உள்ள குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உடனடியாக மேற்படி இடத்தை சர்வே செய்து நடவடிக்கை எடுக்கும் படி கடந்த 28.6.22 அன்று தீர்ப்பு வழங்கியது.
அதன் பேரில் கொடு முடி தாசில்தார் மாசிலா மணி தலைமையில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் முன்னி லையில் குரங்கன் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டருக்கு நில அளவை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
நிலஅளவையின் போது கிளாம்பாடி பிர்க்கா நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கொளத்துப்பாளையம் சுசீலா, கொளாநல்லி பிரகாஷ், ஊஞ்சலூர் ரமேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.