search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • 65-வது நினைவு தினத்தையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினை விடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 65-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர். முதலில் இமானுவேல்சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில் பேரன்கள் சக்கரவர்த்தி, சந்திரசேகர், பேத்திகள் சுந்தரி, ரிஸ்வானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் இன்று காலை இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் சுர்ஜித் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி.ஐ.ஜி.க்கள், 24 எஸ்.பி.க்கள், 26 ஏ.டி.எஸ்.பி.க்கள், 60 டி.எஸ்.பி.க்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் 150 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மேலும் 3 டிரோன் காமிராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கமுதி பகுதியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் சென்று வந்தன.

    • மானாமதுரையில் வ.உ.சி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை நகரில் பல இடங்களிலும் வ.உ.சி உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்.சி தெரு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    கால்பிரிவு கிராமத்தில் 23-வதுஆண்டாக வ.உ.சி. மன்றம் சார்பில் வ.உ.சிதம்பிரம்பிள்ளை பிறந்தநாள் விழா நடந்தது. விழாவை கிராமம் முழுவதும் வீதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வ.உ.சி. உருவப்படத்துக்கு பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்புவனம் நகரில் வ.உ.சி. பேரவை, வெள்ளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் ஒன்றியப் பகுதிகளிலும் மற்றும் ஏராளமான கிராமங்களில் வ.உ.சி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பரமக்குடியில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
    • தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.முத்தையா, சதன்பிரபாகர், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக் அகமது, மாநில பேச்சாளர் ஆலம், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தர்மர் எம்பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடலாடி முன்னாள் ஒன்றிய செயலாளர் மூக்கையா, பேரூர் செயலாளர் சதீஷ், கடலாடி ஒன்றிய செயலாளர் சண்முக பாண்டியன், வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், பரமக்குடி வின்சென்ட் ராஜா, நயினார் கோயில் வக்கீல் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், கொடிக்குளம் சத்தியேந்திரன், கரைமேல் குடியிருப்பு சேதுராமன் உள்பட பலர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன் பின்பு தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆணி வேராக திகழும் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் தான் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு அவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சேர்க்கலாமா? என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சோலைராஜா, சரவணன், தினேஷ்குமார், சிவா தேவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மூக்கையாதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் குமார் எம்.பி. பங்கேற்றார்.
    • பஸ் நிலையம் முன்பு உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே. மூக்கையாதேவர் நினைவிடம் உள்ளது. இங்கு மூக்கையாதேவரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு குருபூஜை நடைபெற்றது. இதில் மேல்சபை எம்.பி. ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டு மூக்கையாதேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    இதையொட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்திற்கு மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கர்ணன், சுப்புராஜ், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதேபோல் மூக்கையாத்தேவர் குருபூைஜயை முன்னிட்டு சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் பஸ் நிலையம் முன்பு உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் பேரூர் தலைவர் ஜெயராமன், மாநில பொதுக்குழு ஸ்ரீதர், அண்ணாதுரை, உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல மறத்தமிழர் சேனையின் மாநில தலைவர். புதுமலர் பிரபாகரன் அறிவுறுத்தலின்பேரில் மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • சிவகாசியில் வ.உ.சி. பிறந்த நாள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151- வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடே ஷ், கருப்பசாமி, மா வட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்.

    மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலா ளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், திருத்தங்கல் பேரவை ரமணா, ராம ராஜ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
    • ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் தனலெ ட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், இதய நோய், நுரையீரல் ரத்த அழுத்த நோய், இருதய தசைநார் நோய், பிறவி இருதய குறைபாடு மற்றும் இருதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும், முகாமில், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ள ப்பட்டன.

    இதில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிள க்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.

    அவருக்கு நிர்வாகிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    முகாமில் முதியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா சுரேஷ், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சின்னதுரை,தனலட்சுமி சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டு வருமாறு ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    திருமங்கலம்

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அரசியலிலும், பொது சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டமன்ற உறுப்பி னராகவும் மக்களுக்கு பணியாற்றியவர் பி.கே.மூக்கையா தேவர்.

    அவரது 43-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் பி.கே.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாளை (6-ந்தேதி) கலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி நீதிபதி ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர், கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் எச்.வசந்தகுமார் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
    • வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பஸ் நிலையம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவரும், மாநில வர்த்தகப் பிரிவு தலைவருமான எச். வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    நகர காங்கிரஸ் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் சசிநகர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், ஆர்.டி.ஐ.மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், முன்னாள் வட்டாரத் தலைவர்கள் அண்ணாத்துரை, ரமணன், ஐ.என்.டி.யூ.சி. தங்கமாரி, துள்ளுக்குட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினம்
    • காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில் அவரது மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மகன்கள் விஜய் வசந்த் எம்.பி., வினோத்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    • அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சமாதான புறா பறக்கவிட்டனர்.
    • 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 7 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சமாதான புறா பறக்க விட்டனர். தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    • தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்
    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்ைட:

    இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தியா முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகின்ற வேளையில், தமிழக அரசு 3 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் ஒரு மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சத்தியமூர்த்தியின் நினைவை போற்றுகின்ற வகையில், தீரர் சத்தியமூர்த்தி பிறந்த திருமயத்தில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்து, தியாகி சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மாணவ மாணவிகளுடன் புகழ் அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மா.மஞ்சுளா புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதியார், திருமயம் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் , இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் இருபால் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர்.
    • சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று காலை தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கருணாநிதி சிலை அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட பொருளாளர்

    எல்.ஜி.அண்ணா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இறைவன், ஜித்து, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், கவுதமன், துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, யூனியன் சேர்மன் வைஜெயந்தி மாலா கேசவன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×