search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    வடவள்ளி, 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.

    நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் விஸ்வநாதன், விஷ்ணுபிரபு, வக்கீல் சுந்தர்ராஜன், வக்கீல் மோகன சுந்தரம். வட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி , பத்மாவதி , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னசாமி, சிடிசி துரைசாமி , மகேஷ், ராஜ்குமார், ரவி, ஞானசேகர், ஆறுமுகம் , ஜனகராஜ், முன்னாள் துணைத்தலைவர் சிவசாமி , மகளிரணி துணை அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, சின்னதங்கம், பகுதி நிர்வாகிகள் வி.எஸ்.ரங்கராஜ், மணி , பாபு, பகுதி ஐடிவிங் கமல்ராஜ், ஆனந்த பாரதி, ஆவின் குருசாமி, பகுதி இளைஞர்கள் அணி நிரஞ்சன் , சக்திவேல் பூபதி, ராஜீவ்காந்தி நகர் கலைச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி எட்டாமடையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை
    • கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர செயலாளர் சுபிகான், மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், நகர அவைத் தலைவர் அருள் சோபன், பொறியாளர் அணி வீர வர்கீஸ், ஆல்வின் வினோ, ஜமீல் குமார், ஸ்ரீ குமார், பிளசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் பிறந்து வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் நினைவு நாள் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் மேலப்பாளைந்த்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி எம். ரமேஷ் தலைமையில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநில தலைவர் முருகசாமி, அமைப்பாளர் சண்முகம், சென்னிமலை வடிவேல், கார்த்திக், வேலுமணி, கமல்நாத், மதன், மோகன், முத்துவேல், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழாவானது 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் இடம் பெற்றது.

    வடவள்ளி

    பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழா ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் ஒரு பகுதியாக சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் பொருட்டு, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தன்னார்வலர்களுக்கு, வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் மற்றும் பி. எஸ். குமாரசாமி ராசா பற்றிய சுவரொட்டி விளக்க காட்சியும் இடம் பெற்றது. அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    விழாவினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ், வேலூர் சிப்பாய் கழகத்தில் பங்காற்றிய வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் முருகவேல், ரூபா குணசீலன், ஆட்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மணிமேகலை, வசந்த், ஆசிரியர் சங்க தலைவர் மஞ்சு புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர்.

    சுவரொட்டி விளக்க காட்சியில் பாரதியார் பல்கலைக்கழக தன்னார்வலர்கள் நாகராஜ், பவதாரணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். எம்.ஜி.ஆர் கல்லூரி அருண் பிரகாஷ், யாழினி ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். பி.எஸ். ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி தன்னார்வலர்கள் சுருதி, ஜானகி ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அண்ணாதுரை செய்திருந்தார். 

    • மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    நடிகர் சிவாஜிகணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ரவிசந்திரன் தலைமையில் பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார் முன்னிலையில், காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாநில பொதுச்செயலாளர் பி.ஜே.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் சிவாஜி மன்ற செயலாளர் நாகராஜன், மதுரைமாவட்ட பொதுச்செயலாளர் போஸ், பகுதி தலைவர்கள் பூக்கடை கண்ணன், மீனாட்சிசுந்தரம், பிச்சாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    • மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்ததினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயாலளர் பூதலூர் என்.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, மாவட்ட ஊடக பிரிவுதலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்டத்தலைவர் கதர்வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிப்புரக்கரை ராஜேந்திரன், தேசிகன், அய்யாறு, சுந்தர், பாலசுப்ரமணியன் காலிங்கராயர், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • காமராஜர் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர் ச.பாஸ்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வி.கே.செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.சி.எஸ்.அறிவுராம், வர்த்தபிரிவு மாநில ெசயலாளர் சிவ.காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.கண்ணன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பானுமதி, நகர தலைவர் ஆர்.ரகுராமன், நகர பொது செயலாளர்கள் கோகுல், எம்.எஸ்.செயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 120 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், தமிழ்நாடு பனைப் பொருள் வாரிய முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விஜய் வசந்த் எம். பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின்,

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் விஜய்வசந்த்எம்.பி., மாவட்டத் தலைவர் கே டி உதயம், , அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதே போல மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தம்பித்தங்கம், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.
    • தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்து தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்.

    தரங்கம்பாடி:

    தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மனி நாட்டு கிறிஸ்தவ மத போதகரான (புராட்டஸ்டாண்டு) சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி தரங்கம்பாடியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.

    மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநர் ஜஸ்டின் விஜயகுமார், சபை சங்க பொறுப்பாளர்கள், ஆயர்கள், பள்ளி ஆசிரி யர்கள், அலுவலர்கள், ஊழி யர்கள் கலந்துக்கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர் புதிய எருசலேம் ஆலயத்தினுள் உள்ள சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி, பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சீகன்பால்கு கப்பலிலிருந்து இறங்கி நின்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் சிறப்பு வழிபாடும், மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று பின்னர் பேரணியாக வந்தனர்.222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 ஜூலை 09 ல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு 1715 ல் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார், இந்தியாவிலேயே முதன் முதலாக தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்

    தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், ஜெர்மன் மொழியிலான ஞானப்பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தார், தமிழ்நூல்களைஜெர்மன் மொழியில் மொழிப்பெ யர்த்தார், முதன்முதலில் தமிழில் அருளுரையாற்றினார், ஜெர்மனியில் தமிழ் மொழியை வளர்க்க வழிவகுத்தார் என இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்த தமிழறிஞர் சீகன்பால்கு வின் தொண்டினை நினைவுகூறும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவதோடு, அவர் வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் சமீபத்தில் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீகன்பால்குவால் அச்சடிக்கப்பட்ட பைபிளை தரங்கம்பாடி க்கு கொண்டு வர வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீகன்பால்கு உருவாக்கிய பள்ளியில் சீகன்பால்குவால் உருவாக்கப்பட்ட பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார். ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    ×