என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி சாவு"

    • ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • நாய் துரத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைகனி.இவரது மனைவி பூசணம் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    செட்டியார்பட்டி ஆசிரியர் காலனி அருகே சென்றபோது திடீரென ஒரு நாய் பின்னால் அமர்ந்திருந்த பூசணத்தை பார்த்து குரைத்தபடி துரத்தி வந்தது. இதனால் பீதியடைந்த அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தார். தலையில் படுகாயமடைந்த பூசணத்தை சேத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கண்டியாமேடு நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி நாகாயாள் (வயது 75) இந்நிலையில் இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த மூதாட்டி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உசிலம்பட்டி அருகே இன்று நடந்த கார் மோதி மூதாட்டி-பசு மாடு பலியாயினர்.
    • இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நடந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது65). இவர் இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றார்.

    நக்கலப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வேமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரஞ்சிதம், பசுமாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பசுமாடு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    விபத்து தொடர்பாக தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார்.
    • திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி ;

    திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி காலனி காட்டாத்துரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி சுலோ சனா (வயது 65). உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார். அப்போது விளக்கு தீ, சுலோசனா உடையில் பிடித்தது. இதில் அவரும் தீயில் கருகினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடல் கருகிய சுலோசனாவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுலோசனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜு புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.
    • சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் கிராமத்தில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது 72) என்பவர் மீது மாடு மோதியதில் படுக்காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தின் அவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அவரது மகன் ரவி வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார்.

    இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. கடந்த சில நாட்களாக ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி திரிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணத்திற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் சென்னம்மா (70). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சென்னம்மா படுகாயம் அடைந்தார்.

    சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற பாது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் விவசாயி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது64).

    இவர் இன்று காலை காவேரிப்பாக்கத்தில் இருந்து வாலாஜாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.

    அப்போது ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பவர் ஓட்டி வந்த பைக் உமா மகேஸ்வரி மீது ேமாதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உமா மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85).

    கடந்த 17-ந் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் உண்ணாமலை பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது தடுமாறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை மாதம்மாள் உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன். இவரது மனைவி மாதம்மாள் (வயது60). இவர் சிக்கமாரண்ட அள்ளி ெரயில்வே கேட் அருகே தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை மாதம்மாள் உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
    • சிகிச்சை பெற்று வந்த நாகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பொம்ம பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது85). சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நாகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார்.
    • அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகம், அம்மா உணவகம் அருகே, கடந்த 19.06.2022 அன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை முடிந்து வெளியே சென்ற மூதாட்டி, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த மாதம் 22-ந் தேதி மூதாட்டி இறந்து போனார்.

    உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×