என் மலர்
நீங்கள் தேடியது "slug 244157"
- போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 77 ஆண்டுகள் போலீஸ் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு மாடி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
அதே வேளையில் பழைய கட்டிடம் போக்குவரத்து போலீஸ் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. வளாகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் செடி, கொடிகள் அதிகமாக வளர தொடங்கியது. இதை அவ்வப்போது போலீசார் வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தம் செய்து வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனை வழங்கினார்.
அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் இணைந்து முதன் முதலாக தக்கலை பஸ் நிலையத்தில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் இருந்த புற காவல் அறையை அகற்றி புதிய அறையை கட்ட ஏற்பாடு செய்தனர்.
மேலும் தக்கலை போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஓரமாக அடுக்கி விட்டனர்.தொடர்ந்து வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் பயமின்றி அமர்ந்து செல்ல அந்தப் பகுதியில் இன்டர்லாக் போடப்பட்டது.போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள சுவரோரம் முதன் முதலாக பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து சுமார் 30 மீட்டர் நீளம் 1½ மீட்டர் அகலம் அளவில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த பூந்தோட்டத்தில் மக்களை கவரும் விதத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. புல் மற்றும் பூந்தோட்டத்தை அமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஆஷா ஜெபகர், அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட காவல்துறையை சேர்ந்த அனைவரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
- நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்
காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:
ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.
- கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார்.
- மழைக்காலங்களில் குளத்து கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார். அதில் கடனா அணை அடிவாரத்தில் பாழடைந்த பூங்காவை பராமரித்து சுற்றுலா தளமாக்கி படகு சவாரி அமைத்து தரவேண்டும். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட அழகப்பபுரத்தில் அரசு நிரந்தர நெல் கொள்முதல் கட்டிடம் அமைத்து தர வேண்டி தெற்கு குருத்துடையார், வடக்கு குருந்துடையார், சம்பன் குளம் ஆகிய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3 குளங்களிலும், பள்ளக்காடுபட்டி குளம்,குட்டிக்குளம், செட்டி குளம் ஆகிய குளங்களிலும் கரை உட்பகுதியில் தடுப்பு சுவர்கள் இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் குளத்து கரைகள் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. உடைப்பு ஏற்பட்டால் நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு குளத்துக்கரைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்துதர வேண்டியும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுருந்தார்.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
- தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.
- பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ஊராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன், துணைத் தலைவர் சிங் .சரவணன், பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சி)சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 75-வது சுதந்திர தின பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. இதை அடுத்து நீலகிரி ஊராட்சிக்கு 2 குப்பைகளும் வாகனங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் மணிகண்டன், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.
- இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கோளரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, சேலம் உள்ளிட்ட மேலும் 6 இடங்களில் புதிய நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தஞ்சை மாநகரமும் ஒன்று. இதில் சேலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு கோளரங்கம் திறக்கப்ப ட்டு விட்டன. திருநெல்வே லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் தருவாயில் உள்ளது.
தஞ்சை ,திருச்சி, தூத்து க்குடி ஆகிய இடங்களில் பணிகள் நடந்து வருகிறது.
தஞ்சையில் அருளா னந்தா நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ள இடத்தில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நவீன கோளரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 71 லட்சம் செலவில் இது அமைக்கப்படுகிறது.
இதில் முதல் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் ,ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. 2-வது பகுதியில் காட்சி கூடம், உள்ளரங்க அறிவியல் சாதனை மையம், கேண்டின் ஆகியவைகளை கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில் இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. அறிவியல் சார்ந்த காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறுகின்றன. 3-வதாக உள்ள பகுதியில் வெளியரங்க அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. இதில் தற்போது 30 அடி உயரம் மற்றும் 20 அடி உயரத்தில் இரண்டு ராக்கெட்டுகள் நிறுவப்பட உள்ளன. மேலும் அரிய வகை விலங்குகள் மற்றும் அதன் தன்மைகள் ,உணவு வகைகள் அதன் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம் பெறும் வகையில் தகவல் பலகைகளும் இடம் பெறுகின்றன.
இதில் யானை, டைனோசர் ,ஆமை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்குகள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு வசதிகளும் செய்யப்படுகின்றன. சிறுவர்- சிறுமிகளுக்கான விளையாட்டு சாதன ங்களும் உள்ளது.
மேலும் பல இடங்களில் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் தஞ்சையில் அமைவதால் அது தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
- அந்த குடும்பத்தில் உள்ள சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான்.
- இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டியதால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராஜப்பா பூங்கா அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா சீரமைக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர்.
இந்த பூங்காவில் ஒப்பந்த ஊழியராக தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்த கந்தசாமி (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தஞ்சை மாவட்ட ஊர்க் காவல்படையிலும் பணிபுரிகிறார். இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை ரோடு மின்வாரிய காலனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பூங்காவுக்கு வந்திருந்தனர்.
அப்போது அந்த குடும்பத்தில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் பூங்கா கழிவறை வெளியே சிறுநீர் கழித்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி அந்த சிறுவனை தாக்கி உள்ளார். இதனை தட்டி கேட்ட அவரது பெற்றோரையும் திட்டினார்.
இதனால் பூங்காவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.
- அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.
- பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.
சேலம்:
ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து மேட்டூருக்கு ஏராளமானோர் வந்தனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை பூங்காைவ நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 197 பேரும், பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.
- பூமி பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா்,உறுப்பினா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் எஸ்எம்.ரஹீம், முருகையா, பேபிரெசவுபாத்திமா, இசக்கித்துரைபாண்டியன், சுப்பிரமணியன், ஜெக நாதன், முத்துப்பாண்டி, இசக்கியம்மாள், சுடர் ஒளி, வேம்புராஜ், பொன்னு லிங்கம் (சுதன்), ராம்குமார், செண்பகராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகர செயலாளா் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சக்திவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் செந்தில் ஆறுமுகம், ராஜா கோபாலன், திலகர், ஞானராஜ், தி.மு.க. நகர துணைச்செயலாளா் குட்டி ராஜா, அவைத்தலைவா் மணிகண்டன், நகர இலக்கிய அணி மாடசாமி, வார்டு செயலாளா் கோபால்யாதவ், இசக்கி முத்து, வனத்துறை விக்னேஷ், சூர்யா, ஹரிஹர லெட்சுமணன், ஒப்பந்தகாரர் ஸ்ரீசபரி சாஸ்தா இன்ப்ரா பிரைவேட் லிமிடேட் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம்.
- 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.
கோவை,
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள் பிரிக்கப்படும் போது, அதில் 10 சதவீதம் பரப்பளவிலான இடத்தை பொது ஓதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) ஒதுக்க வேண்டும்.
இந்த பொது ஒதுக்கீட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது வழக்கம். சில இடங்களில் சமூக நலக்கூடம், ரேஷன் கடை போன்ற கட்டிடங்களும் கட்டப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன.
இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில், சாலைகள் விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளின் போது சாலையோர மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் மாநகரில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து பசுமை சூழல் பாதிக்கப்படுகிறது. பசுமைச்சூழலை மேம்படுத்துவதில் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
மாநகரில் பல ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பாலும் முறை யாக பராமரிக்காததாலும் வீணாகி வருகின்றன. சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை பொது ஒதுக்கீட்டு இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளை மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியதாவது:-
மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், பசுமை பகுதிகளை அதிகரிக்கும் பொருட்டு, மாநகராட்சியின் பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம் மற்றும் பூங்கா ஆகியவற்றை தாங்களாகவே நிறுவி பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள் நகரமைப்பு அலுவலரை 0422-2390261 என்ற எண்ணிலும், mlyvavaki.corpcbe@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை யும் மறு நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- பூங்காவுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
- சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவற்றை கேட்டு அறிந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு மணிமண்டப பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் அனைத்து வித மான விளையாட்டுபொரு ட்களும் உள்ளன. இதனால் மணிமண்டபம் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.
இந்த நிலையில் பூங்கா வுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களால் இந்த வாகன நிறுத்தம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவ ற்றை கேட்டு அறிந்தார்.
இந்த பார்க்கிங்கில் இருச க்கர வாகனம் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார்மணிக ண்டன், ஊரக வாழ்வா தார இயக்க திட்ட இயக்கு னர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள்சிவா, சரவணன் சீனிவாசன், சுவாமிநாதன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
- 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னை தங்கசாலையில் பிரமாண்ட நடைபயிற்சி பாதை, மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பூங்கா திறக்கப்பட உள்ளது.
வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளுடன் கூடிய பிரமாண்ட நடை பயிற்சி பாதை,மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்காக 1 கி.மீட்டர் நீளத்துக்கு நடை பயிற்சி பாதைகள்,சிறுவர்களுக்காக உடற்பயிற்சி கூடம், அடர்வனம் (மியாவாக்கி) பூங்கா, தியானமண்டபம் நுழைவு பிளாசா, மூலிகை காடுகள், பெண்கள் உடற்பயிற்சி மையம், கூழாங்கல் நடை பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பசுமை பூங்கா 1550 ச.மீ., யோகா கூடம் 1250 ச.மீ, திறந்த ஜிம்-800 ச.மீ, பார்க்கிங் 400 ச.மீட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது.
இந்த பூங்காவில் வேம்பு, புங்கை, மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம், செண்பகம், மகிழம், உள்பட 1000- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மேலும், சிறுவர் விளையாட்டுதிடல், தியானமண்டபம், திறந்தவெளி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கான உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகில் பொதுமக்கள் வசதிக்காக பிரமாண்ட நடைபயிற்சி பாதைகளுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. பூங்காவில் எல்இடி விளக்குகள், நவீன இருக்கைகள் அமைய உள்ளது. ஆண்கள், பெண்கள். குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதி,குடிநீர் வசதி செய்யப்படுகிறது.
சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு திடல் ஏற்படுத்தப்படுகிறது. கூழாங்கல் 8 வடிவ நடை பயிற்சி பாதை மற்றும் தடுப்பு கம்பிகளுடன் கூடிய சுற்று சுவர்கள் அமைக்கப்படுகிறது.
இந்த பூங்கா பணிகள் மிக வேகமாக தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த பூங்காவில் அடர்வன காடுகள் அமைக்கப்படுவதால் அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தி கிடைக்கும்.இந்த பகுதியில் இதன்மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.