என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேயர் ஆய்வு"
- 3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
- அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட இடலாக்குடி பாவலர் அரசு பள்ளி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் கழிவு நீர் ஓடையின் மூடி பழுதடைந்து காணப்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.பின்னர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினார். 48-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகர் நல அதிகாரி ராம்குமார் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் பியாசாஹஜிபாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து 1-வது வார்டுக்குட்பட்ட கடை தெரு பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் ஓடை கான்கிரீட் அமைக்கும் பணியையும் விராணி பூங்காவில்ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும், 51-வது வார்டுக்குட்பட்ட கீழக்காட்டுவிளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு,கோவில் விளை பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் காங்கீரிட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
25-வது வார்டுக்குட்பட்ட அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் தங்க ராஜா, அக்சயா கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணிகளை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
- குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 1, 2-வது வார்டிற்குட்பட்ட ஜூஜூவாடி , உப்கார் லேஅவுட், ஆபீசர் காலனி, திருவள்ளூர் நகர், ராஜாஜி நகர், காந்தி ரோடு, ஜெய்பீம் நகர், நேதாஜி நகர், எஸ்.எல்.வி.நகர், பி.டி.ஆர் நகர் பகுதியில் மண் சாலையை, தார் சாலையாக மாற்றும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும், மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் அசோக் ரெட்டி, தரன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
- விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் தலா ரூ. 24.96 மதிப்பீட்டில் பூச்சி நாயக்கன்பட்டி, சவேரியார் பாளையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த சமுதாய சுகாதார வளாகங்களை மேயர் இளமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன வசதிகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ஹசீனா பர்வீன், உதவி பொறியாளர் சத்யா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
- உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
- அம்மா உணவகம் மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் மண்டலம்-3, குமரன் வணிகவளாகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க விளம்பரத்தட்டிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்விளம்பரங்களில் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம்,கட்டணமில்லா பேருந்து, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மின்வாகனப் பூங்கா, கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழடிஅருங்காட்சியகம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், புதிய பேருந்துவாங்குதல், பழைய பேருந்து புதுப்பித்தல், விவசாய மின் இணைப்புகள், கலைஞர்நூற்றாண்டு நூலகம், தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) நவீன தரத்திற்குஉயர்த்துதல், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி,மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்வு ஆகிய திட்டங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் குமரன் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம்மற்றும் கணினி வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், "ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி" குறித்த சாதனை விளக்கவிளம்பரங்கள் மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், கலைஞர்பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்,மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மின்னணுத் திரைகளில் பொது மக்கள் அறிந்துபயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்(பொறுப்பு) கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
- மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில்
மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளு டன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியும், பணிகளை நேரடியாக சென்றும் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு மற்றும் 60 அடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
அப்போது முடிக்க படாத பணிகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
- மதுரை 4-வது மண்டல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
- அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வு ெய்தனர்.
41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
- மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட மத்திகிரி பகுதியில், நீண்ட நாட்களாக சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டிய நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக, மேயர் சத்யாவுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் மேயர் சத்யா, நேற்று சமுதாயக்கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் கலாவதி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு பகுதிகளான மணியக்காரம்பாளையம்,ராக்கியாபாளையம் ரோடு, பாரதிநகரில் தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலைப்பணிகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்துபொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதேபோல் வாவிபாளையம் தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் துணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.மேலும் அப்பகுதியில் அமைத்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் வடிகால் மற்றும் அடிப்படை தேவைகளை ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர்.
- மேயரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
- ரூ.1.22 கோடி மதிப்பில் பணிகள் நடக்கிறது
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 722 மீட்டர் தூரத்திற்கு ரூ 1.22 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் தெருக்களில் உள்ள கால்வாய் விட அதிக உயரத்திற்கு கால்வாய் கட்டப்படுவதால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாய் உயரத்தை குறைத்து கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மேயர் சுஜாதா கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரரிடம் இது எனது வார்டு, எனவே பொதுமக்கள் குறை கூறும் அளவிற்கு இல்லாமல் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதை எடுத்து சேம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெறும் பாதாள சாக்கடை வெட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும்நிலையில், ஒசூர் மாநகரின் தாழ்வான பகுதிகளான கேசிசி நகர்,பசுமை நகர் மற்றும் குறிஞ்சி நகர், ஜிஆர்டி சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேயர் சத்யா ,கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்ட அவர், மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை முடுக்கி விட்டார்.
இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்பி ரமணியன், துணைமேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் யசஷ்வினி மோகன், மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
- பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் சீமான் தோட்ட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வகுப்பறையாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதனை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் பாடம் நடத்தி மாணவர்களின் கல்வி கற்கும் தரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு கூறினார். அப்பொழுது மாநகர திமுக செயலாளர் கே. எஸ்.ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி,மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்