search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் ஹாசன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.
    • சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கமலின் அரசியல் பிரவேசம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும், புதிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அரசியல் களத்தில் மய்யம், மய்யம் கொண்ட இடத்தில் அப்படியே நிற்கிறது. பெரிய அளவில் நகரவில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.

    ராகுலின் நடை பயணத்தில் கலந்து கொண்டதால் காங்கிரசுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் சொல்லவில்லை. அதற்கு அவர் வெளிநாடு சென்றதை காரணம் காட்டினார்கள்.

    தற்போது சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கமலை பொறுத்தவரை சினிமாவில், தான் செய்ய நினைப்பதை செய்து முடிப்பார். அதில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படமாட்டார். அதேபோல்தான் அரசியலிலும்...! அவரிடம் பின்வாங்கும் எண்ணம் இல்லையாம்.

    பாராளுமன்ற தேர்தலிலும் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கூட்டணியா? இல்லையா? என்பது பற்றி மட்டும் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

    • உரிமைத் தொகை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் என கமல் கூறி உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக கமல் கூறியிருப்பதாவது:-

    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    • ஒரு இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் பங்கேற்றதாக கமல் பேசினார்.
    • அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என பலரும் வலியுறுத்தினார்கள். ஒரு இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். மாற்று கொள்கைகள் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்.

    என்னுடைய தந்தை காங்கிரசைச் சேர்ந்தவர். ராகுல் காநதி தன்னை ஒரு தமிழன் என குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர் எனக்கு சகோதரர். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
    • தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ந்தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப்போல பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சுற்றுப்பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பது பற்றி கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல் ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். "சீரமைப்போம் தமிழகத்தை" என்கிற முழக்கத்தோடு பல கட்டங்களாக சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை கட்சியின் அடித்தளம் வலுவில்லாமல் இருக்கும் பகுதிகளில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கமல் ஹாசன் தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பது பற்றி கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதன் மூலம் கமல் ஹாசன் தனது அதிரடி அரசியல் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்க உள்ளதாக கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் தற்போது வெளி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக தலைவர் கமல் ஹாசன் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த பயணம் விரைவில் தொடங்கும்.

    2024-ல் ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே கமல் ஹாசனின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

    கமல் ஹாசனின் வலியுறுத்தலால் நிறைவேற்றப்பட்ட ஏரியா சபை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. விரைவில் பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும், நெல் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும், ஊழலுக்கு துணைபோன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும், மாநிலக் கல்வி கொள்கையானது உலகத் தரத்தில் அமைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×