search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி விமான நிலையம்"

    • வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
    • 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுடெல்லி :

    தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் அவற்றை பயணிகள் கடத்தி வந்துள்ளனர். தண்ணீர் மோட்டாரில் செம்புச்சுருள் இருக்கும் இடத்தில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • துபாய் விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளில் தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் பல இருந்தன.
    • தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் மதிப்பு சுமார் ரூ.28 கோடி என மதிப்பிடப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளில் தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் பல இருந்தன. அவை முறைகேடாக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவற்றின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி என மதிப்பிடப்பட்டது. டெல்லி விமான நிலையில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட வணிகம் மற்றும் ஆடம்பர பொருட்களின் அதிபட்ச மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகை 60 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு சமம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜக்ஜித் சிங் இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளார்.
    • துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருந்துள்ளன

    புதுடெல்லி:

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட தம்பதியர் பெயர் ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கவுர் என விசாரணையில் தெரியவந்தது. கடந்த 10ம் தேதி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியா திரும்பிய அவர்கள், சுங்கத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    ஜக்ஜித் சிங் இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளார். விசாரணையில், அந்த துப்பாக்கிகளை அவருக்கு அவரது சகோதரர் மஞ்சித் சிங் கொடுத்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×