search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்காரர்"

    • மளிகை கடை நடத்தி வந்தார்.
    • கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள பி.மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
    • கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலூன் கடைக்காரரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 34).

    இவரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 34). என்பவரும் நண்பர்கள். இசக்கி முத்து ஒற்றையால்விளையில் தங்கியிருந்து சின்னமுட்டம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இருவரும் ஒற்றையால்விளை சமுதாய நலக்கூடம் அருகே மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் பிரபுவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவை கைது செய்தனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர்.

    இவர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள ஒரு கடையில் கியாஸ் அடுப்பு வாங்கியுள்ளார். ஆனால் அதை சரியாக அமைக்காததால் கியாஸ் அடுப்பில் கரையான் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரிசெய்து தரும்படி கடைக்காரரை அணுகியுள்ளார்.

    கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசேகர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இந்த நிலையில் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதை ஜெயசேகருக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 மற்றும் அபராத தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

    • உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கீழத்தெருவை சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது 58). இவர் வீட்டருகே எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி, மகன் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். கடந்த 17-ந்தேதி இவர் நடத்தி வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையை மூடி விட்டார்.

    இதனால் அவர் மனம் உடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகள் மற்றும் மருமகன் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது.பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது கலீல் ரகுமான் சமையலறையில் தீயில் கருகி கிடந்தார்.அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்ப டுகிறது.

    இது குறித்து அவரது மகள் இர்பானா பர்வீன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கலீல் ரகுமான் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து கடைக்காரர் பலியானார்.
    • வயரை வாயால் கடித்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெண்ணகோனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தனது வீட்டிற்கு வெளியே சூப் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் வீட்டிலிருந்து வெளியே உள்ள கடைக்கு பல்ப் போடுவதற்காக வயரிங் வேலை செய்யும் போது வயரை வாயால் கடித்துள்ளார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாத காரணத்தினால் சுப்பிரமணியன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×