search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 ரூபாய் நாணயம்"

    • 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா?
    • பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற சந்தேகம் இன்னும் பல இடங்களில் நீடித்து வருகிறது.

    10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கிழிந்தும் கசங்கியும் காணப்படுகிறது. இதனை தவிர்க்க ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு வரை 14 முறை 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது.

    ஆனால் 10 ரூபாய் நாணயம் வெளியானதில் இருந்தே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாணயம் செல்லாது என்ற வதந்தி வேகமாக பரவியது. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை.

    பொதுவாக காய்கறி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், சிறு ஓட்டல் வியாபாரிகள், சில்லறை காசுகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினாலும் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் மட்டும் வாங்க மாட்டோம் என கூறினர்.

    கிழிந்து போன கசங்கிய 10 ரூபாய் நோட்டு கூட வாங்கும் பொதுமக்கள் நாணயங்களை வாங்குவதில்லை.

    பெரிய வணிக வளாகங்களில் கூட 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தவறான எண்ணம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் குறைந்து வருகின்றன. அதனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அவற்றை மறுக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது . நாணயங்களை வாங்க மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் செய்தது. ஆனாலும் அது பல இடங்களில் எடுபடவில்லை.

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதிகளில் இன்னும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. கிழிந்த ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நாணயங்களையும் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து அதற்கு மாற்றாக ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் விஜயவாடாவில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 12 லட்சம் ரூபாய் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் வீணாக குவிந்து கிடக்கின்றன.

    இதே போல பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வீணாகக் கிடக்கின்றன.

    இது ரிசர்வ் வங்கிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நாணயங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது என மீண்டும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.
    • சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வதந்தி உள்ளது.

    இதனால் வியாபாரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பொதுமக்களும் அதனை பயன்படுத்துவதில்லை.

    தற்போது வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடம் ரூ.10 நாணயம் புழக்கத்தில் இல்லாததால் அதனை காண்பது அரிதாகிவிட்டது.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சாலையில் உள்ள ஒரு கடையில் கடந்த 3 நாட்களாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.10 நாணயங்கள் 5 வழங்கினால் புதிய டீசர்ட் வழங்கப்படும் என அறிவித்தனர்.

    இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாமல் தூக்கி ஒதுக்கி வைத்திருந்த நாணயங்களை அவசர, அவசரமாக சேகரித்து எடுத்துக்கொண்டு அந்த கடையில் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்று நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தினமும் 60 நபர்களுக்கு டோக்கன் வழங்கி பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நாளை வெள்ளிக்கிழமை வரை மட்டுமே, இந்த விற்பனை செய்யப்படும் என கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தின்மூலம் பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வந்துள்ளது.

    அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயம் புழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

    இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்

    நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
    • வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.

    10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.

    அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
    • போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    கடலூர் :

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.

    இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

    இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.

    இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.

    ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.

    தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.

    • 200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி :

    10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதனை வாங்க வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என பெரும்பாலான மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர். பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அங்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணி முதலே முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர்.

    இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணங்களை பெற்று கொண்டு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேற்று 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    • 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.
    • மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    வேலூர்:

    ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10,20 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

    இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர்.

    தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10,20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே பரவியது.

    பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இந்த 10 ரூபாய் நாணய விவகாரத்தை பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. எனினும் வேலூர் மாவட்ட மக்களை விட்டு வதந்தி அகலவில்லை. 10 ரூபாய் நாணயங்களை செல்லாதவையாகவே மக்கள் கருதுகின்றனர். வங்கிகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.

    வேலூரில் சுற்றுலா பயணிகள் மற்றும் சிகிச்சைக்காக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வருகின்றனர்.

    இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சுமார் 15,000 வட மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர். வட மாநிலத்தவர்கள் வருகை வேலூர் நகரை வர்த்தக மையமாக மாற்றி உள்ளது. வேலூருக்கு வருகை தரும் வெளியூர் மக்கள் 10-20 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு அலைகின்றனர்.

    சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் 10,20 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் அவதியடைகின்றனர்.

    பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லரையாக கொடுங்கள் என்று கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை.

    ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர். இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பவர்கள் கூட இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை கோவில் உண்டியலில் போட்டுச் செல்கின்றனர்.

    கடைக்கு வரும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் பொதுமக்கள் தரப்பில் வியாபாரிகள் வாங்கவில்லை அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

    ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்பான பிரச்சினையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

    இதற்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் தான் களமிறங்கி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள், வாங்க மறுப்பதாக தெரியவருகிறது. இது வெறும் வதந்தி, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும், அனைத்து வங்கிகளிலும் அரசாங்க அலுவலகம் 10,20 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது, எனவே 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10,20 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
    • பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரூ.10 நாணயங்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் காரண மாக பல இடங்களில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அவற்றைப் பெற தயக்கம் காட்டுவது கவனத்துக்கு வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி இந்த நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்களை வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

    ரூ.10 நாணயங்கள் பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களின் பல்வேறு கருப்பொருள் களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

    இந்த நாணயங்களின் நீண்ட கால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு வடிவங்களில் ஒரே நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் உள்ளன.

    இதுவரை ரிசர்வ் வங்கி 14 விதமான ரூ.10 நாணயங்களை வெளி யிட்டுள்ளது. பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்த னைகளி லும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும். வங்கிகளும் பரிவர்த்தனை மற்றும் பரிமாற்றத்து க்காக ரூ.10 நாணயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 நாணயங்களை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள், பஸ் கண்டக்டர்கள், வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை.
    • அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தமது எல்லாக் கிளைகளிலும் 10 ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவும், பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. வங்கிகளிலும், பஸ்களிலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் தயக்கமில்லாமல் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்.

    • திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
    • இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர்.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயங்களை திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் மாவட் டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை கண்டாலே எடுத்துஎரிந்து பேசுகிறார்கள். அந்த நாணயங்களை டீக்கடை முதல் பெரிய கடைகள் வரை வாங்குவது கிடையாது.

    இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் 10 ரூபாய் நாணயங்களை மகிழ்ச்சி யுடன் வாங்கி வருகிறார். இதற்கான அறிவிப்பும் அந்த ஓட்டலில் ஒட்டப் பட்டுள்ளது. இதனை அறிந்த 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருக்கும் நபர்கள் அந்த ஓட்டலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    • கிழிந்த ரூபாய் நோட்டுகளால் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வலு பெற்று ள்ள கார ணத்தால் 10 ரூபாய் நாணய த்தை வைத்து ள்ள வணி கர்களும், பொ தும க்களும் வெகு வாக பா திக்க ப்பட்டு வருகிறார்கள்.

    10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

    தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் திருப்பதிக்கு வேலூர் வழியாகத்தான் சென்று வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்கள் தன்னிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

    ஆயிரம், 2 ஆயிரம் என ஆயிரக்கண க்கில் 10 ரூபாய் நாண யங்க ளை வை த்திரு ப்பவர்கள் என்ன செய்வ து என்ற குழப்ப த்தில் இரு க்கிறார்கள். சிறுவி யாபாரிகள் 10 ரூபாய் நாணையங்களை வாடிக்கையாளர்களிடம் வாங்க மறுப்பதோடு, வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்ற விழிப்புணர்வு இல்லை.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லும். அதனை வர்த்தர்கர்கள், பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் 10 ரூபாய் நோட்டுகள் தற்போது தட்டுப்பாடாக உள்ளது.

    பழைய 10 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும் அதிக சேதமடைந்த நிலையில் தான் உள்ளன.

    இதனால் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவி வருவதால் அதனை வாங்க மறுக்கின்றனர்.

    அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும்.

    10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் மத்தியில் அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×