என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தி.மு.க. ஆட்சி"
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம்.
நாகர்கோவில் :
முன்னாள் முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆரல் வாய்மொழி நகர பூங்காவில் வைத்து நடைபெற்றது. தோவாளை ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை தலைமை தாங்கி னார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலா ளருமான முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம். வாழ்க்கை நெறிமுறை தேவையில்லை என ஒரு அமைச்சர் பேசி கொண்டிருக்கிறார். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கை நடத்துவதற்கு நெறிமுறை கள் தேவை. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் மகன் அந்த நெறிமுறையை அழிக்க முயற்சிக்கிறார். அவர், அவருடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.
தி.மு.க. கடந்த 2½ ஆண்டு ஆட்சியில் குமரி மாவட்டத் திற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசா யிகளுக்கு தேவையான விதை கிடைக்கவில்லை, விவசாயத்திற்கு தேவை யான தண்ணீர் இல்லை. இது மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டு கிறது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அவரது பத்மநாபபுரம் பகுதியில் நான்கு பால் சொசைட்டி களை ஆரம்பித்தார். இது தேர்தல் நேரத்தில் ஆரம் பிக்கப்பட்ட பால் சொசைட்டி. இப்போது அங்கு யாரும் பால் கொடுப்பதில்லை. பாலே கொடுக்காத சொசைட்டி அங்கே தான் உள்ளது.
குமரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாவட்டத்தின் உச்ச அதிகாரி சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார், ஒழுங்கை யும் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். அவர் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் பாதுகாப்போடு கட்டிடம் கட்ட பாதுகாப்பு வழங்குகிறார். தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டனர். அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி யின் பெயர் இந்தியா. அதன் கதாநாயகன் ஸ்டாலின். அந்த கட்சியே ஊழல் கட்சி ஊழலுக்காக இரண்டு முறை தி.மு.க. டிஸ்மிஸ் செய்யப்பட் டுள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் நேரத் தின் போது அனைவருக்கும் நகைகடன் தள்ளுபடி என்று கூறி னார்கள். ஆனால் அது அனைவருக்கும் கிடைக்க வில்லை. அனைத்து மக ளிர்க்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்றனர். இப்போது அதுவும் அனைவருக்கும் இல்லை தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், தலைமை கழக பேச்சாளர் பட்டணம் (எ) நைனா முகம்மது, அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், சுந்தரம், மாவட்ட வக்கீல் அணி துணைச்செயலாளர் பரமேஸ்வரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, ஆரல் வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறினார்.
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சம்பட்டு கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்க எனக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் தீட்டப்படுகிறது. திமுகவையும், கருணாநிதியையும் உருவாக்கியவர் அண்ணா. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த கட்சி நீதிக்கட்சி.
சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்ற ஆணை, விதவை பெண்களுக்கு அரசின் சார்பில் தையல் எந்திரம், காவல் துறையில் பெண்கள் பணியாற்ற ஆணை, தேர்தலில் 33 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெண்களுக்காக கருணாநிதி திட்டங்களை தீட்டினார்.
தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்தி வருகிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார்.
இது பெண்களுக்கான ஆட்சி. ஆயிரம் ரூபாயை எதிர்பார்த்திருக்கும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்பி த.வேணுகோபால், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலிமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன், தொழிலதிபர் பன்னீர்செல்வம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
- தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.
எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
- இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.
மதுரை
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப் படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
தமிழகம் முழுவதும் விலை–வாசி உயர்வை கண் டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை–யில் ஆரப்பாளையம் பெத் தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங் களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு கூடியி–ருந்த அ.தி.மு.க. நிர்வாகி–களும், தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண் ணாதுரை, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவ–ணன், மாணிக்கம், ராஜாங் கம், வெற்றிவேல்,நிலையூர் முருகன் கவுன்சிலர்கள் சோலைராஜா, சண்முக–வள்ளி, மாயத்தேவன், ரூபிணி குமார், பைக்காரா கருப்புசாமி, பரவைராஜா, முத்துவேல், கலைச் செல் வம், கே.வி.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல் லூர் ராஜூ பேசியதா–வது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த நன்மை–யான திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இத–னால் இந்த ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கி–றார்கள்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார் கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு மூன் றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள் ளார். அவரால் தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசும் போது, அமைச்சர்களோ, தி.மு.க.–வினரோ ஏதாவது பிரச் சினையை ஏற்படுத்தி விடு–வார்களோ என்று நினைத் துக்கொண்டு இருக்கிறேன், இதனால் தூக்கம் என்று தவிக்கிறேன் என்றார்.
ஆனால் இப்போது மத்திய அரசின் அமலாக துறையின் சோதனை அவ–ருக்கு மிகப்பெரிய கலக் கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வெளியே வடி–வேல் பாணியில் பேசி சமாளிக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக்" என்ற வகையில் தி.மு.க. உள்ளது.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும். கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினின் இந்த அரசை விரைவில் கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தமிழக போலீஸ் மீது மத்திய அமலாக்க துறைக்கு நம் பிக்கை இல்லை. அந்த அள–வுக்கு தமிழக காவல்துறை சீரழிந்து விட்டது. அதனால் தான் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக் கத்துறை தி.மு.க. அமைச் சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனை இன்னும் தொடரும். 2016-ம் ஆண் டுக்குள் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கருணா–நிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி மாபெரும் எழுச்சி மாநாட்டை எடப்பா–டியார் தலைமையில் கூட்டி உள்ளோம்.
இந்த மாநாட்டில் மது–ரையில் இருந்து 4 லட்சம் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வின் இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
- போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
- தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம், பெரிச்சிபாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மகே ஷ்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-
ஏற்றுமதி வர்த்தகத்தில், எண்ணற்ற பெருமைகளை பெற்ற திருப்பூர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் ஏழை நகரமாக மாறிவிட்டது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், தொழிலாளர்கள் வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர் தி.மு.க., ஆட்சி அமையும் போதெல்லாம், திருப்பூர் வறுமையால் பாதிக்கப்படுகிறது. ஆட்சி வருவதற்கு முன்னதாகவே வறுமை வந்துவிடுகிறது. திமுக அரசு உயர்த்தி உள்ள வரி உயர்வால், பொதுமக்கள், தொழில் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுத்திகரிப்பு தொழில்நு ட்பத்தை செயல்படுத்த, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி, திருப்பூருக்கு உயிர் கொடுத்தவர் அம்மா. அதன் மூலம் திருப்பூர் தொழில் வளம் பெற்று திருப்பூர் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். தற்போது, பஞ்சு நுால் விலை உயர்வால், தொழில் நடத்தியவர்கள் கடனாளியாக மறிவிட்டனர். நிலைமை சரியாக, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், கண்ணன், கேசவன், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்..பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் திரு.கோபால்சாமி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
- வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.
ராஜபாளையம்
மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்ப டவில்லை. ஆனால் இன்று குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர்.மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.
பொதுமக்களின் அன்றாட பிரச்சினை குறித்தும், மின் கட்டண உயர்வு குறித்தும் தெரியாமல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்குகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 50-வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்நடந் தது.
ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்-மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வருகிற தேர்தலில் ''வேட்டு போடும் திருவிழாவுக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு வைக்கிறோம் வேட்டு'' என்று கூற வேண்டும்.
சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 1 கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது. எளிய மக்கள் தொண்டன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வர வேண்டும். நீங்கள் நூலிழையில் தப்பித்தீர்கள். 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்கில் வெற்றி பெற்றீர்கள். அ.தி.மு.க அடுத்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் புனித அரசை அமைத்துக் காட்டும்.
மக்கள் மன்றத்தில் நாங்கள் பேசுகிறோம். அதை சட்டமன்றத்திலும் பதிவு செய்ய வேண்டும். அதனால் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். அதைப் பற்றி உங்களோடு விவாதிக்க வேண்டும். காவல்துறையின் மானியகோரிக்கையில் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அத்தனை கொடுமைகளை பற்றி எல்லாம் எடப்பாடியார் கேள்விகள் கேட்டார். அதற்கு முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி விடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பேரூர், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
- தி.மு.க. அரசு மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதாக திருச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பேசினார்
- வெற்றிடத்தை எடப்பாடியார் வெற்றியின் இடமாக மாற்றிக் காட்டினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்தார்
திருச்சி:
அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி உறையூர் குறத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவைத் தலைவர் அய்யப்பன், ஆவின் சேர்மனும், மாவட்ட மாணவரணி செயலாளருமான கார்த்திகேயன்,
முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நிர்வாகிகள் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், வெல்லமண்டி பெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தென்னூர் அப்பாஸ், கருமண்டபம் நடராஜன், ஜோசப் ஜெரால்டு, அழகரசன் விஜய், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக்,
பகுதி பொருளாளர் சந்திரசேகர், பகுதி அவைத்தலைவர் எம்.ஜே.பி.வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கோவிந்தசாமி, மருத்துவர் அணி பொருளாளர் வடிவேல், தலைமை கழக பேச்சாளர்கள் பாலு, ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் பேசும்போது, திருச்சி மாநகரில் உள்ள சாலைகள் மோசமாக இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் தூய்மையான மாநகரப் பட்டியலில் திருச்சி ஆறாவது இடத்துக்குள் இருந்தது.
ஆனால் இன்றைக்கு 158-வது இடத்துக்கு சென்று இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு ஷாக் கொடுத்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வார்கள் என்று பேசினார்.
முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி.ரத்தினவேல் பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் வெற்றிடம் ஏற்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அதனை எடப்பாடியார் வெற்றியின் இடமாக மாற்றிக் காட்டினார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்தார்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. விலைவாசி, மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. மக்கள் இப்பொழுது அ.தி.மு.க. ஆட்சியின் மகத்துவத்தை உணர ஆரம்பித்து உள்ளார்கள்.
தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. போகப்போக வெறுப்பு மேலும் அதிகரிக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என்றார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, தலைமை கழக பேச்சாளர் ஆரி, வட்டச் செயலாளர்கள் என்.டி.மலையப்பன், என்ஜினீயர் ராஜா, காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், தர்கா காஜா, பொன்.அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, முத்தையன், என்ஜினீயர் ரமேஷ், புத்தூர் சதீஷ்குமார், விஜயன், ரமணிலால், மாணவரணி ராஜசேகர், குமார், கே.டி.அன்புரோஸ், வண்ணாரப்பேட்டை ராஜன், கே.டி.ஏ.ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
- தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசின் மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது :- இந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆனால்தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள். இலங்கை அதிபரான ராஜபட்சே இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என ஓடினார். அதே நிலைமை தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியின் போது குப்பை வரி உயர்த்துவதாக சொன்னதற்கே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இரண்டு அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் இன்று குப்பைக்கு வரி விதித்து இருக்கிறார். தி.மு.க.வுக்கு திருப்பூருக்கும் எப்போதும் ஒத்து வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் திருப்பூர் நாசமாக போகிறது. 2010 ல் தொழில் எல்லாம் மூடிப்போய் மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டு மக்கள் சென்றார்கள். இன்றைக்கு அதே போல ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வால் திருப்பூர் தொழில் நிலை முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாய ஆலை பிரச்சினை ஏற்பட்டு திருப்பூர் தொழில் முடங்கிய போது ஜெயலலிதா வட்டியில்லா கடனாக 213 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றினார்கள். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.
திருப்பூருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்து இருக்கிறது. 1300 கோடி செலவில் நான்காவது குடிநீர் திட்டத்தினை கொண்டு வந்து இருக்கிறோம். ஏற்கனவே நிறைவேறி இருக்க வேண்டிய இந்த திட்டத்தினை மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒரு நன்மையும் மக்களுக்கு செய்யாத தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உடனடியாக நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை முடித்து திருப்பூர் மக்களுக்கு திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்து விட்டது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
- நல்லது நடக்கும் என மனு கொடுக்கிறார்கள்
- மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளருமான மு.பாபு வரவேற்று பேசினார்.
வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமாரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, ஆர்.கே.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 200 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி, 150 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், 100 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், 100 நாவிதர்களுக்கு சலூன்கிட், 25 ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ, 150 கிராம இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அணைக்கட்டு தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முகம் தான். என் மீது அதிக பாசம் கொண்டவர். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞருடன் பயணித்தவர். தற்போது அவர் முதல்-அமைச்சருக்கு துணையாகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
60 ஆண்டு கால உழைப்புக்கு சொந்தக்காரர். இந்த மாவட்டத்தின் மண்ணின் மைந்தர் அமைச்சர் துரைமுருகன். என்னை தூக்கி வளர்த்தவர் அவர். இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லையென்றாலும் அவருடைய மனம் முழுவதும் இதை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கும்.
முதல் பிரசார சுற்றுப்பயணம்
வேலூர் மாவட்டத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்கும் முன்பே என்னுடைய முதல் பிரசார சுற்றுப்பயணம் வேலூர் மாவட்டத்தில் தான் தொடங்கியது.
நான் வாக்கு சேகரித்த முதல் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த். அதேபோன்று கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இந்த மாவட்டத்துக்கு வந்து அனைத்து தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறினேன்.
ஆனால் இங்கு வந்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது பொற்கிழி மட்டும் அல்லாமல் தையல் எந்திரம், சலவைபெட்டி, ஆட்டோ, விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏ.பி..நந்தகுமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. எப்போதும் சுறுசுறுப்பா கவும், பரபரப்பாகவும் காணப்ப டுவார். அதேவே கத்தில் இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதியில் அணை கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன்படி அணைக்கட்டு தொகுதியில் ரூ.50 கோடி செலவில் அணை கட்டி தரப்படும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது நல்ல எண்ணம் உள்ளது.
பொதுமக்கள் மனு அளித்தால் நல்லது நடக்கும். நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை தொடரும். தமிழகத்தில் நல்ல ஆட்சியை முதல்-அமைச்சர் கொடுத்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து1¼ ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
நான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இங்கு பொற்கிழி பெற்ற கட்சியின் முன்னோடிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்திருக்க கூடும். நான் இவர்கள் அனைவரையும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக பார்க்கிறேன். அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி செல்பி எடுக்க வேண்டும் என ஆசை தான் ஆனால் நேரம் போதவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்