என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திம்பம் மலைப்பாதையில்"
- பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார்.
- இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது திடீரென பஸ்சில் டமால் என்று ஒரு சத்தம் கேட்டு பஸ் பின்னோக்கி சென்றுள்ளது.
டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சை வளைவு அருகே இருந்த சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் பெரு அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.
பஸ்சில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்சில் இருந்த பயணிகள் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் மற்றும் மாற்று பஸ்சில் தாளவாடி மற்றும் மைசூர் சென்றனர்.
இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
- இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
தாளவாடி:
திம்பம் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை, இரவு நேரங்களிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலைவு வறுகிறது.
இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஆசனூரில் இருந்து திம்பம் மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு வரை பனிமூட்டம் இருந்தது.
இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.காலை 10 மணி அளவில் இந்த பனிமூட்டம் விலகியது. பின்னர் வாகனங்கள் சீராக செல்ல தொடங்கின.
திம்பம் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பணி மூட்டத்தின் அழகை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
- திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது.
- மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வழியாக பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வரு கின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடி, ஆசனூர், திம்பம், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதி களில் பரவலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் திம்பம் வனப் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியது.
மேலும் வனப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் மழை பொழிவு குறைந்தது. ஆனால் தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பனி துளிகளுடன் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
மேலும் தொடர் மழை காரணமாக தாளவாடி, திம்பம், ஆசனூர், பெஜ லெட்டி, பண்ணாரி உள்பட வனப்பகுதிகளில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.
இதையொட்டி மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் காலை 8 மணி வரையும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வந்தனர்.
இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இன்று காலை 2 வாகனங்கள் வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த 2 வாகனங்களும் திம்பம் மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது பனி பொழிவு காரணமாக எதிர்பாராத விதமாக பக்க வாட்டில் உரசி கொண்டது.
இதனால் அந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டிரைவர்கள் வாகனங்களை நடு ரோட்டில் அப்படியே நிறுத்தினர்.
இதனால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதையொட்டி திம்பம் மலைப்பாதையில் ரோட்டோரம் கார், லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த நிலையில் இரவு 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது.
- சிறுத்தை நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தாளவாடி,ஜுலை:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் இரவு 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது.
அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்