search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் முடிவு"

    • ராமநாதபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளி தற்காலிக இடத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை செயல்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் ரூ.6 கோடியில் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அரசு உண்டு உறைவிடப்பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் தற்போது தற்காலி கமாக பட்டணம்காத்தான் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆக.1-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் அரசு உண்டு உறைவிடப்பள்ளிகள் 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை செயல்படுகின்றன.

    கடந்தாண்டு ராமநாத புரம் உள்பட 27 மாவட்டங்களில் தலா ரூ.6 கோடியில் அரசு உண்டு உறை விடப்பள்ளி களை தொடங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இந்த பள்ளிக்கு தேவையான 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில், இந்த ஆண்டே பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளை ஆக.1-ந்தேதி முதல் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிகமாக பட்டணம்காத்தான் பகுதியில் இந்த ஆண்டு மூடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிக வகுப்புகள் தொடங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×