search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிழற்குடை"

    • பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர்.
    • பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்டிகை:

    செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர். இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக வரும்போது மழைக்கு கூட நிழற்குடையில் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    எனவே பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர்.
    • பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    கடலூர்:

    கடலூரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர். இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்வேறு பஸ்கள் தினசரி செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் மந்தாரக்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் மழை க்காலத்தை சமாளிக்க ஏதுவாக பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
    • விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌ அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாடா ளுமன்றத்தேர்தலை முன்னிறுத்தி மேற்கொ ள்ளப்படவில்லை. நாடு முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியே பாதயாத்திரை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை போல் அனைத்து பதவிகளும் நியமன பதவிகளாக இருக்கக் கூடாது என்பதே காங்கிரசின் அடிப்படை நோக்கமாகும்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உண்மையில் இந்த திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் தான் அடிக்கல் நாட்டிருக்க வேண்டும்.

    இமாச்சல பிரதேசத்தில் 2015-ம் ஆண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பணிகள் முடிந்து அதனை தற்போது அவர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஜப்பான் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது நிதி மதிப்பீடு மாறும் போது அதை அனுமதிக்க காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, நலவாய் பாண்டியன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் ஆகிய உடன் இருந்தனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதி 44 வது வார்டில் உள்ள கோம்பை தோட்டம் பகுதி பள்ளிவாசல் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ்,வடக்கு மாநகரக் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி செயலாளர் மு .க .உசேன் , 44 வது வட்ட செயலாளர் ரபிக், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திலகராஜ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
    • நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

     உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் எலையமுத்தூர் பிரிவில் தனியார் பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிழல்குடையை தற்போது சிலர் ஆக்கிரமித்து மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மதுஅருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து விட்டும் சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள்நிழற்குடைக்குள்சென்று காத்திருப்பதற்கு‌ பதிலாக ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது. எனவே நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×