என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டும் மத்திய அரசு- எம்.பி. குற்றச்சாட்டு
- எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
- விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாடா ளுமன்றத்தேர்தலை முன்னிறுத்தி மேற்கொ ள்ளப்படவில்லை. நாடு முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியே பாதயாத்திரை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வை போல் அனைத்து பதவிகளும் நியமன பதவிகளாக இருக்கக் கூடாது என்பதே காங்கிரசின் அடிப்படை நோக்கமாகும்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உண்மையில் இந்த திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் தான் அடிக்கல் நாட்டிருக்க வேண்டும்.
இமாச்சல பிரதேசத்தில் 2015-ம் ஆண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பணிகள் முடிந்து அதனை தற்போது அவர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஜப்பான் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது நிதி மதிப்பீடு மாறும் போது அதை அனுமதிக்க காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, நலவாய் பாண்டியன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் ஆகிய உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்