என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷாஹிதுல் இஸ்லாம்"
- கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
- வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதிப்படி தனது மாதிரியை பரிசோதனைக்கு ஷாஹிதுல் இஸ்லாம் வழங்கியிருந்தார். அதில் தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு 10 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி. ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தின் பிரிவு 2.1-யை மீறியதற்காக வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
அவர் கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.