search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில் கேட்ஸ்"

    • இளைஞர் ஒருவர் ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.
    • இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

    உலக கோட்டீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தான் ரொட்டி சமைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்ததாகவும், அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.

    மாவு பிசைந்து, உருண்டை பிடித்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி சுடுவதை பின்பற்றி, பில்கேட்ஸ் ரொட்டி சுட்டார். இந்த வீடியோ வைரலானது.

     இந்நிலையில், பில்கேட்ஸின் சமையலுக்கு பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், "இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளின் ஒன்று திணை. இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்" என்று சிரித்த எமோஜியுடன் பிரதமர் கூறினார்.

    • இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார்.
    • பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    வாஷிங்டன்:

    நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.

    • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர்.
    • பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    வாஷிங்டன் :

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார். 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவது குறித்து பில் கேட்ஸ் கூறியதாவது:

    எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

    மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ×