என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க. பொதுக்கூட்டம்"
- மதுரையில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள்- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
- மருத்துவ பிரிவு டாக்டர் கே .முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் பா.ஜ.க. மருத்துவ பிரிவு டாக்டர் கே.முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசி வருகின்றனர். இதேபோல் மதுரை அண்ணாநகரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதே போல் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
- விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
அவிநாசி:
பா.ஜ.க. 8ம் ஆண்டு சாதனை விளக்க தாமரை மாநாடு நாளை 17-ந்தேதி பல்லடம் கரையாம்புதூரில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க நூதன முறையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் விசிட்டிங் கார்டில், மாநாடு நடைபெறும் இடம், தேதி அச்சிட்டு மாநாட்டிற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்