search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம்.
    • வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 2.13 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.53 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருவாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-விருத்தி

    சிம்மம்-துணிவு

    கன்னி-போட்டி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- இன்பம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-பணிவு

    மீனம்-உற்சாகம்

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.
    • புனித தோமையார் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    தமிழ்நாட்டில் தமிழ்மொழி முதன்முதலாக அச்சேறிய இடம், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல்.

    வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் தாமிரபரணி ஆறு 5 கிளைகளாக பிரிந்து கடலில் ஐக்கியமாகிறது. அவற்றின் நடுவில் கடலின் முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வந்தடைந்து கிறிஸ்தவத்தைப் போதித்தார். பின்னர் தமிழகத்திலும் வேதத்தைப் போதித்தார்.

    அவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் புன்னக்காயலில் அவரது நினைவாக ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில், ஏராளமான புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புன்னக்காயலுக்கு வந்து, புனித தோமையார் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளின் வழியாகவும் நடந்தே புனித தோமையார் ஆலயத்துக்கு செல்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் படகில் பயணித்து புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தவக்காலத்தில் ஏராளமானவர்கள் இங்கு வந்து புனிதரை தரிசிக்கின்றனர். இங்கு புனிதர் நிகழ்த்திய அற்புதம் ஏராளம்.

    முன்பு தாழ்த்தப்பட்ட மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபட்டதும் அவர்களின் நோய் நீங்கிற்று.

    இதையடுத்து அந்த குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக அசைவ உணவு சமைத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட பிற மதத்தினர் சமைத்த உணவு என்பதால் அதனை சாப்பிட யாருமே செல்லவில்லை.

    இதனால் வருத்தம் அடைந்த அந்த குடும்பத்தினர், தாங்கள் தயாரித்த உணவை, ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மண்ணில் குழி தோண்டி, பாத்திரங்களுடன் புதைத்துச் சென்றனர்.

    இதையடுத்து சில நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது புன்னக்காயல் ஊரையே தண்ணீர் சூழ்ந்தது. உடைமைகளை படகில் ஏற்றிக்கொண்டு மக்கள் கடலின் முகத்துவாரம் வழியாக வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முகத்துவாரத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆலய வளாகத்தில் அடுத்தவேளை உணவின்றி, கடும் பசியுடன் துயருற்று சோர்வுடன் கண் அயர்ந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், "ஏன் உணவில்லாமல் அனைவரும் வாடுகிறீர்கள்? இங்குதான் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளதே?" என்று ஓரிடத்தை காட்டி விட்டு மறைந்தார்.

    அப்போது அங்கு சுடச்சுட சாதம் வடித்து, கறிக்குழம்பு வைத்த மணம் நிலத்துக்கு அடியில் இருந்து வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டியபோது, அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்த சாப்பாடு, கறிக்குழம்பு நெடுநாட்களாகியும், கெட்டுப் போகாமல் அப்போது சமைத்த நிலையிலேயே சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

    அதனை எடுத்து சாப்பிட்டு பசியாறிய மக்கள், மேலும் 2 நாட்கள் வைத்து அவற்றை ருசித்து சாப்பிட்டனர். அதற்குள் வெள்ளமும் முழுமையாக வடிந்ததால் மக்கள் தங்களது வீடுகளுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.

    சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சமத்துவமாக வாழ, புனித தோமையாரே நேரில் வந்து தங்களுக்கு உணர்த்தியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணற்ற புதுமைகளை புனிதர் நிகழ்த்தியதாக தெரிவிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளை மக்கள் கடந்து செல்லும்போது, யாரேனும் வழி தவறி சென்றால், அவர்களுக்கு முன்னால் நாய்கள் நீந்திச் சென்று ஆலயத்துக்கு வழிகாட்டி அழைத்து வந்து சேர்ப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சாதுவான நாய்கள் சுற்றித் திரிவதை எப்போதும் காண முடியும். ஆற்றைக் கடக்கும்போது பாதைக்காக ஆங்காங்கே கொடிகளை நட்டு வைத்துள்ளனர். புனித தோமையார் ஆலயத்தின் முகப்பில் 2 சிலுவைகள் உள்ளன.

    அவற்றில் ஒரு சிலுவையை தோமையார் நிறுவி வழிபட்டதாகவும், மற்றொரு சிலுவை கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை ஆலயத்தில் நிறுவி வழிபடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    • இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை.
    • நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    முந்தைய காலங்களில் கிராமப் புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து, அதில் ராமபிரான் அல்லது கண்ண பிரான் திரு உருவப்படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இத்தகைய கோவில்கள் 'பஜனைக் கோவில்கள்' என்று அழைக்கப்பட்டன.

    இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய்க் கூடி பஜனைப் பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் பஜனைக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    இந்த பஜனை கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமபிரான், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகளை பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன.

    அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரியகாட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

    சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில், நவநீதக் கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார். 1904-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

    நவநீதக்கண்ணன் பஜனைக் கோவிலாகத் திகழ்ந்த இத் தலத்தில், முதலில் ருக்மணி - சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள், பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்க நர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர்.

    கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பலிபீடமும், அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன.

    கருவறையின் முன்னால் சுதைச்சிற்ப வடிவில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சி தருகிறார்கள். கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

    வேணுகோபால சுவாமி புல்லாங்குழலை தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ளார். உற்சவர்களாக ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், ஆண்டாள் மற்றும் நவநீதக்கண்ணன் இருக்கிறார்கள்.

    இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் அன்று பரிவேட்டை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாவது வாரம் சிறப்பு வழிபாடுகள், விஷேச சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடை பெறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று தவறாமல் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து, இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.

    மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வேணுகோபால சுவாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் - விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது, பெரியகாட்டுப்பாக்கம் திருத்தலம்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • சகல சிவாலயங்களில் ஆனி உத்திர தரிசன விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சஷ்டி நண்பகல் 12.15 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.20 மணி வரை. பிறகு அஸ்தம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். ஸ்ரீநடராஜர் அபிஷேகம், ஆனி உத்திர தரிசனம். சகல சிவாலயங்களில் ஆனி உத்திர தரிசன விழா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் தண்டியலில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருவிடைமருதூர். ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமாள் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-பண்பு

    கடகம்- உதவி

    சிம்மம்-போட்டி

    கன்னி-அன்பு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- உண்மை

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பயணம்

    • சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம்.
    • ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெருமானின் மிக உகந்த நாட்களில் ஒன்று ஆனி உத்திரம் ஆகும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானாகிய சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    நடப்பாண்டிற்கான ஆனி உத்திரம் வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரமான இன்று மதியம் 1.47 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் மாலை 4.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது.

    ஆனி உத்திரம் வந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் களைகட்டும். குறிப்பாக, நடராஜப் பெருமானுக்கு உகந்த நாளான ஆனித் திருமஞ்சனம் இருப்பதால் தில்லை நடராஜனாக சிவபெருமான் காட்சி தரும் சிதம்பரம் கோவிலில் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுவது வழக்கம்.

    தனிச்சிறப்பு:

    நடப்பு ஆனி உத்திரத்தில் வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருகிறது. சஷ்டியானது முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் ஆகும். ஆனி உத்திர தினத்திலே வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமான் – முருகப்பெருமான் இருவரையும் வணங்குவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

    வழிபடுவது எப்படி?

    ஆனித் திருமஞ்சன தினத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு நேரில் சென்று, சிவபெருமானை வழிபடலாம். பெரும்பாலான சிவாலயங்களிலே முருகப்பெருமானுக்கும் கோவில் இருப்பதால் இருவரையும் வணங்குவதால் பலன் உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலே சிவபெருமானின் படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு பூஜை செய்வதும் தனிச்சிறப்பு ஆகும்.

    ஆனி திருமஞ்ச தினத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற சிவாலயங்களிலும் சிவ பக்தர்கள் குவிவார்கள்.

    • ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி பிறக்கிறது.
    • மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது.

    நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் ஜூலை 17ம் தேதி பிறக்கிறது. 17ம் தேதியானது புதன்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத பிறப்பிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது முதலே கோயில்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

    ஆடி மாதம் வரும் ஜூலை 17-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரை வருகிறது. ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். மிகப்பெரிய அம்மன் கோயில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்மன் கோயில்களிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கொண்டாட்டம்:

    ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி தபசு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை என பல விசேஷங்கள் கொண்டாடப்பட உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் தொடர்ந்து அரங்கேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை காட்டிலும் வட மாவட்டங்களில் ஆடி மாதம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆடியின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.

    ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இன்று ஆனி உத்திரம், அபிஷேகம். கந்த பஞ்சமி.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-27 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 10.19 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: பூரம் நண்பகல் 1.46 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று ஆனி உத்திரம், அபிஷேகம். கந்த பஞ்சமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் திருவிழா தொடக்கம். தங்கச் சப்பரத்தில் பவனி. ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி திருக்கல்யாணம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலையில் சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-நிறைவு

    கடகம்-வரவு

    சிம்மம்-செலவு

    கன்னி-யோகம்

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- பொறுமை

    மகரம்-நற்சொல்

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-வெற்றி

    • ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
    • திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-26 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 8.31 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: மகம் காலை 11.20 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலைய்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா. ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-வரவு

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-நன்மை

    துலாம்- சுபம்

    விருச்சிகம்-கடமை

    தனுசு- தாமதம்

    மகரம்-மேன்மை

    கும்பம்-பயணம்

    மீனம்-முயற்சி

    • நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும்.
    • நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே கூத்தன் (நடராஜர்) திருக்கோலமாகும்.

    நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும். அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திரமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர்.

    ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந் தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம்.

    சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்று பாடுகின்றன திருமுறைகள்.

    இந்த நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி உத்திரத்தில் ஆனந்தம் தரும் நடராஜரை தரிசித்து, வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைய ஆனந்த கூத்தனை வழிபடுவது நல்லது.

    • 12-ந்தேதி ஆனி திருமஞ்சனம்.
    • 15-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    9-ந்தேதி (செவ்வாய்)

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி கருட வாகனத்தில் உலா.

    * குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

    * ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்தில் பவனி,

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

    * திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

    11-ந்தேதி (வியாழன்)

    * சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * ராமநாதபுரம் கோதண்ட ராமர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் உலா.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந்தேதி (வெள்ளி)

    * ஆனி திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (சனி)

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் 15 பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (சனி)

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி குதிரை வாகனத்தில் உலா,

    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு)

    * வடமதுரை சவுந்திர ராஜர் அன்ன வாகனத் தில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (திங்கள்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதாரம், அனுமன் வாகனத்தில் உலா.

    * வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்பம்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தா வர்ணம்.

    * சமநோக்கு நாள்.

    • இன்று சதுர்த்தி விரதம்.
    • மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 6.59 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 9.09 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி. மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-நலம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- சிறப்பு

    மகரம்-தெளிவு

    கும்பம்-விவேகம்

    மீனம்-பண்பு

    ×