என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெகதீப் தங்கர்"
- துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
- மனுதாக்கல் செய்ய வருவோரின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
- துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.
- இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க கவர்னரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதை முறைப்படி அறிவித்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜெகதீப் தங்கருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்