search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார்.
    • யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க. மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்றுசேர்க்கும் யாத்திரை என தெரிவித்துள்ளார்.

    • தனது தாயாரை சோனியா காந்தி சந்திக்க உள்ளார்.
    • சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா வெளிநாடு செல்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார்.

    வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் 4ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல் உரையாற்றுகிறார்.

    இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம் மேற் கொள்ள உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வெளிநாடு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அவர்கள் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர். எந்த நாடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர் என்ற விபரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சோனியாகாந்தி சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
    • சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது.
    • நல்ல மனிதர் வெளியேறுகிறார் என காங்கிரஸ் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் போட்டியிட உள்ளார்.

    இந்நிலையில், ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை காங்கிரஸ் பாராட்டி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெங்கையா நாயுடுவின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் தவறவிடப்படும். பல சமயங்களில் அவர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தார். ஆனால் இறுதியில் ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் சோர்வடைய மாட்டார் என எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

    ×