search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி வன்முறை"

    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.
    • ஏற்கனவே 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.

    இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதானவர்களில் 64 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்நிலையில், மற்ற 174 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இம்மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் 56 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மற்ற 49 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.

    இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

    மேலும், கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    • மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
    • மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.

    வேப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார்.

    தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவி இறப்புக்காக, 17-ந் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.

    நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரை தளத்தில் இருந்து மாணவியை, 3 பெண்கள், ஒரு ஆண் என, 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13-ந் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாணவியின் தாய் செல்வியின் வக்கீல் காசிவிஸ்வநாதன் கூறுகையில் மாணவி இறப்பு தொடர்பாக வீடியோவை பிட்டு பிட்டாக வெளியிடுவது ஏன், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை காவல் துறை முழுமையாக வெளியிட்டால் சந்தேகங்கள் தீர்ந்து விடும் என்றார்.

    இதுகுறித்து ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியதாவது:-

    சி.சி.டி.வி. காட்சி பொய்யான தகவல். இதனை பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் 13-ந் தேதியே காண்பித்திருக்கலாம். 13-ந் தேதி பள்ளியில் காட்டப்பட்ட சிசிடிவி காட்சி. ஒரு நிமிடம் காண்பித்து உள்ளார்கள். அதில் தூக்கி செல்வது போல் காட்சிகள் இல்லை. இதனை யார்? வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

    இன்று காண்பித்தது அப்பட்டமான பொய்யான சி.சி.டி.வி. பதிவு. ஸ்ரீமதி விழுந்த இடம் வேறு, தூக்கி செல்லும் இடம் வேறு 5.30 மணிக்கு காண்பிக்கிறார்கள். 5:30 மணிக்கு மேல் (முன்பு) இரவு நேரத்தில் சி.சி.டி.வி. பதிவு வேலை செய்யவில்லையா? பதிவு முழுமையாக இல்லையா? எத்தனை மணிக்கு விழுந்தாள்? எப்படி துடித்தாள்? எப்படி கத்தினார்? என காண்பிக்கவில்லை. வாட்ச்மேன் மண்ணாங்கட்டி பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். மற்ற 3 பேரை குறிப்பிடவில்லை. இதன் மூலம் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஏற்கனவே இந்த வழக்கில் கைதான 103 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இந்த சம்பவத்தில் மாணவியின் மர்ம சாவு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இரு சம்பவம் தொடர்பாக இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கலவர வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி கைதாகி கடலூர், வேலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 173 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் அந்தந்த சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

    அதேபோல் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கலவர வழக்கில் கைதான ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகிய 5 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று முடிந்ததை அடுத்து அவர்கள் 5 பேரை மீண்டும் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான 103 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
    • இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களை சி,பி.சி.ஐ,டி. போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி சாந்தி விசாரணை இன்று (1-ந் தேதி) நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

    அதன்டி பேரில் ஜாமீன் மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி விசாரணையை 10-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதனிடையே இறந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி இன்று காலை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி உள்ளார்.

    இந்த மனுவினை நீதிபதி சாந்தி ஏற்றுக்கொண்டார்.

    • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது.
    • கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

    எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை வரும் என அனுபவரீதியாக ஆலோசனை கூறினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் அந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

    தமிழக போலீஸ் துறை ஒரு புகழ்பெற்றது. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்?, எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பியிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும். வன்முறையாளர்கள் பள்ளி உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது போலீஸ் துறை பயந்து ஓடுகிறது.

    போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றபோது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரை எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.

    அது கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள கல்விக்கூடங்களில் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் காலை சிற்றுண்டி நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழக அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக தமிழக உளவுப்பிரிவு மீது பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உரிய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் பொது இடங்களில் விவாதப்பொருளாக இருந்தது.

    தமிழக மக்களின் இந்த மனநிலையை உளவுத்துறை தகவல்கள் மூலம் தமிழக அரசு துல்லியமாக தெரிந்து கொண்டது. மக்களிடம் நிலவும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், மக்களின் மனம் குளிரும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கையில் எடுக்கப்பட்டது. சுமார் 34 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டினார். சமீபத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலையில், இனி தங்கள் குழந்தைகள் காலையிலும் பள்ளிக்கூடத்தில் வயிறார சாப்பிடுவார்கள் என்று பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கறையை காலை சிற்றுண்டி மூலம் சரி செய்து விட்டதாக கருதுகிறார்கள். இந்த திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    • சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறப்பு தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியது தொடர்பாக தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (22), வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28), கச்சிராபாளையம் அருகே மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி (20), தியாகதுருகம் அருகே காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (18)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுவரை கனியாமூர் கலவரம் தொடர்பாக 321 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
    • விடுதிகளுடன்கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், 3 அரசு டாக்டர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 'மறு பிரேத பரிசோதனை முடிந்து, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டது. அது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை ஆவணங்கள் ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட உள்ளன' என்று கூறினார்.

    பின்னர், இதுகுறித்து மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அசன் முகமது ஜின்னா கூறியதாவது:-

    டி.ஐ.ஜி. தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகள் போலீஸ் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    தற்போது மாணவியின் மரணம், பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் ஆகிய இரு வழக்குகளையும் தனித்தனியாக போலீசார் விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் போலீசாரிடம் இல்லை. தமிழக அரசால் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 27-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சரிசெய்ய 2 வாரங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீதிபதி, 'இதே நிலை நீண்டநாட்கள் தொடரக்கூடாது. விரைவில் பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன்கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடாது. இம்மாதிரியான சம்பவத்தை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது, அதைப் பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாணவர்களை படிக்கும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்' என்று கூறினார்.

    பின்னர், 'போலீஸ் விசாரணைக்கு இடையூறாக உள்ள யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
    • ஜாமீன் மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    கைதான 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவினை அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த மனு இன்று காலை நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் சங்கீதா ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகலை கொண்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் உள்ளதால் ஏற்கனவே தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனுவை ஏற்க முடியாது. எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வக்கீலுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
    • தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டு, 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.

    இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் நான்கு முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வன்முறையின் போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24),கார்த்திக் (24) கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (20), கமல் ராஜ் (21), ஸ்ரீதர் (20), சத்தியமூர்த்தி (22), பாலமூர்த்தி (22), மற்றும் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய கடலூர் மாவட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கைதான 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற புஷ்பராணி அனுமதி வழங்கினார்.
    • பள்ளி மாணவி இறப்பு விவரம், அதற்கான காரணம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றபுஷ்பராணி அனுமதி வழங்கினார்.

    அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அவர்களிடம் கனியாமூரில் நடந்த பள்ளி மாணவி இறப்பு விவரம், அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு 5 பேரும் பதில் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவினை அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போது ஜாமீன் கிடைக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.

    ×