என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்ற"
- பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.
மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெருந்துறை பட்டக்காரன் பாளையம், கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த செரீப் (54), சத்யா நகரை சேர்ந்த முனியப்பன் (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் திருவாச்சி வாவிக்கடையை சேர்ந்த பாப்பாத்தி (70) என்ற மூதாட்டியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாப்பாத்தியை போலீசார் கைது செய்தனர். இவர்களி டமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மொடக் குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது ராசாம் பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல் நேரில் சென்று விசாரனை நடத்தி னார்.
இதில் லாரி டிரைவரான பாலா முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் கஞ்சா வாங்கி ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 4 6புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர்.
- கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.
- இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு தாலுகா போலீசார் சென்னிமலை ரோடு, அணைக்கட்டு, வாய்க்கால்கரை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக ஈரோடு சென்னிமலைரோடு சேனாதிபதிபாளையத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் சஞ்சய் (வயது 21), ரங்கம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்த சங்கரின் மகன் சந்தோஷ் (22), சூரம்பட்டிவலசு ராமமூர்த்தி தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் கவின்குமார் (21) ஆகியோரை கைது செய்தார்கள்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தார்கள். அதன்படி 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வங்கி கணக்கு களை முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் 70 பேர் இனிவரும் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னட த்தைக்கான பிணைய பத்திரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடப்பது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 94880 10684 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஉள்ளார்.
- ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு, ஆக. 10-
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வரும் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையம் ராம்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (45). இவரது மனைவி பழனியம்மாள்.
தம்பதியினர் 2 பேரும் சம்பவத்தன்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரித்தபோது தம்பதியினர் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சூரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்ற 1 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனி ப்பிரிவு போலீசார் மற்றும் சித்தோடு போலீசார் காலிங்க ராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் 3 வாலிபர்கள் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் (24), காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம். வீதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மெய்யப்பன் (19) மற்றும் சித்தார், குப்பிச்சிபாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் (24) என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
மேலும் அந்த வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக 300 கிராம் எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்ட லங்களை போலீசார் பறி முதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியான காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி 3 பேர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்