search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயன்பாடு"

    • இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
    • குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பருவநிலை குழம்பிபோயுள்ள நிலையில் அதன் தாக்கம் உலக நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. துபாய் கனமழை, ஆப்கனிஸ்தான வெள்ளம், இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

    சமீப காலமாக தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் கர்நாடக தலைநகர் பெங்களூரு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

     

     

    இன்று (மே 29) வரலாறு காணாத வகையில் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து கார் கழுவுவது, கட்டுமான பணியிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வேலைகளுக்கு குடிநீரைப் பபயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது.

     

    மக்கள் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுப்பதை கவனிக்க 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோரிக்கை விடுத்தும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட வில்லை என்றும் அரியானா பாஜகஅரசு டெல்லி அரசுக்கு எதிராக சதி செய்கிறதுஎன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     

     

    உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இடத்ற்கிடையில் டெல்லியில் சில பகுதிகளில் லேசான மலை பெய்ததால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைத்துள்ளனர். 

    • 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • குத்துவிளக்கு ஏற்றி வைத்துபொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் குடிசை வாழ் பகுதிகளிலும் நகர்ப்புற மருத்துவ மனைகளை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 780 நகர்புற நல்வாழ்வு மருத்துவமனைகளை தொடக்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழகத்தில் 500 இடங்களில் நகர்புற நல வாழ்வு மையத்திதை றந்து வைத்தார். விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலை அண்ணா அறிவாலயம் பின்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனைமையும், விழுப்புரம் பானாம்பட்டு அரசு பள்ளி அருகிலும் நகர்புற நல்வாழ்வு மையங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து வழுத ரெட்டி பகுதியில் டி.ஆர்..ஒ பரமேஸ்வரி, , எம். எல் .ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மாவட்ட சேர்மன் ஜெய ச்சந்திரன் தலைமையில் , விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, துணை சேர்மன் சித்திக் அலி, கவுன்சிலர்கள் வித்திய சங்கரி பெரியார், மணவாளன், புருஷோத்தமன், சங்கர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் செயலாளர் சக்கரை, மாவட்ட துணை செய லாளர் தயாஇளந்திரையன், முன்னாள் கவுன்சிலர் முத்து கணேசன், பொறியாளர் பிரிவு பரத், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சிட்டிபாபு, விஜய் சேதுபதி, டாக்டர் தாமரை மணவாளன், பெரியார் நகர் தீவனுரான், முன்னாள் முகாம் அமைப்பாளர் ஓவியர் காசிலிங்கம் கலந்து கொண்டனர் முடிவில் நல்வாழ்வு மைய மருத்துவமனை டாக்டர் நன்றி கூறினார்.

    • பள்ளிக்குழந்தைகளின் புத்தக அறிவை அதிகரிக்க புத்தக பூங்கொத்து திட்டத்தை தி.மு.க., அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
    • வகுப்புகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

    உடுமலை:

    உடுமலையில் 300க்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்குழந்தைகளின் புத்தக அறிவை அதிகரிக்க புத்தக பூங்கொத்து திட்டத்தை தி.மு.க., அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப கதை மற்றும் நாடக புத்தகங்கள் அரசின் சார்பில் வழங்கப்படும். புதிர் வினாக்கள், விடுகதைகள் என மாணவர்களின் சிந்தனையை தூண்டும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த புத்தகங்களை வகுப்பறைகளில் மாணவர்களின் கண்பார்வையில் இருக்கும் படி கொத்துக்களாக தொங்க விட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் அவர்களது பிறந்தநாளன்று, இனிப்புகள் வழங்குவதற்கு மாற்றாக புதுமையான புத்தகத்தை அந்த வகுப்புக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு வகுப்புகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

    ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வராத நேரத்தில் பாடஇடைவேளை நன்னெறி வகுப்புகளின்போது, மாணவர்கள் அவர்களாகவே புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.புத்தகங்களை படித்து புதிர்போட்டு விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழந்தைகளின் வாசிப்புத்திறனும் மேம்பட்டது. இத்தகைய திட்டம் தற்போது அரசு பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது.வரும் புதிய கல்வியாண்டிலாவது இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தால் குழந்தைகளும் ஆர்வத்தோடு, அவர்களாகவே அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்தனர். இதனால் வாசிப்புத்திறன் மட்டுமின்றி அடிப்படை கணக்குகளையும் அறிந்து கொண்டனர்.அப்போது திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி அறிக்கை கேட்கப்படும். மாணவர்களின் புத்தக வாசிப்பு குறித்து கல்வித்துறையின் வாயிலாக ஆய்வு நடத்தப்படும். அதனால் திட்டத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது என்றார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.
    • வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,500 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு 18 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் பணிபுரி கின்றனர். இந்த மருத்துவ மனையில் மாதம்

    300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறு கிறது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, குன்னூர், எம்.புதுப்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிரா மங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடை பெறும் மருத்துவ மனைகளில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை கள் சிகிச்சை பிரிவு கட்டிடம் 27 ஆயிரத்து 750 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் லிப்ட், பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    அறுவை சிகிச்சை மையம், உயர் சார்பு அலகு (ஹெச்.டி.யு), பச்சிளம் குழந்தைகளுக்கான இன்கு பேட்டர் வசதியுடன் சேர்த்து 100 படுக்கைகள் கொண்ட தாக மப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த மகப்பேறு பிரிவு கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் போது ஏற்கனவே உள்ள 135 படுக்கைகளுடன் சேர்த்து 235 படுக்கை கொண்ட பிரமாண்ட மருத்துவமனையாக இருக்கும்.

    இதுகுறித்து மருத்து வர்கள் கூறுகையில், மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் போது, அதற்குரிய நவீன மருத்துவ கருவிகள், கூடுதல் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டு மான பணிகள் நிறைவ டைந்துள்ளது. 6 மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

    • சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.
    • ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான் மருந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    கும்பகோணம்:

    சோயா சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் சார்பில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமிற்கு சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயக்குனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணன் வரவேற்றார்.

    முகாமிற்கு வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி கலந்துகொண்டு பேசுகையில் சோயா பீன்ஸ் முக்கியத்துவம் அதன் பயன்கள், ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், சாகுபடி தொழில் நுட்பங்கள், பற்றியும் குறைந்த நாட்களில் குறைந்த செலவில் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் சோயாவில் 18 முதல் 20 சதவீத எண்னெய் உள்ளது, சோயா எண்ணையை அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் மேலும் சோயாவில் புரத சத்து 38 முதல் 40 சதவீதம் உள்ளது.இந்த புரத சத்து உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.

    நெல் சாகுபடிக்கு பிறகு சோயா சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.

    இந்த ஆண்டு கும்பகோணம் வட்டத்திற்கு சோயா சாகுபடி செய்ய 100 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் சோயா தொகுப்பு செயல் விளக்கத்திற்காக ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 5000 மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் ஒரு எக்டருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான மருந்து 50 சத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    சோயா பீன்ஸ் விதைகள் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள சுவாமிமலை, கொத்தங்குடி, சோழபுரம், கும்பகோணம், கொற்கை, ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா விதைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் சோயா கல அலுவலர் வெங்கடாசலம் உதவி அலுவலர் விவேக், உதவி வேளாண்மை அலுவலர் கீர்த்திகா, முன்னோடி விவசாயி சந்திரசேகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுக்கும் வசதி.
    • சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுத்து பச்சிளம் குழந்தைகளின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    ஒரு முறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்–படும் உடல் பகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுத்தாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • ஊடகப்போதையில் மாணவர்கள் தங்களது பொரும்பாலான காலத்தை வீணடித்து தங்களது உடல்நலம் , சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்றனர்.

    நாகர்கோவில்:

    சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2020-21-ம் நிதியாண்டில் போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின்கீழ் நாசா முக்த் பாரத் பிரசாரமானது இந்தியாவிலுள்ள 272 போதை பயன்பாடு அதிகமுள்ள மாவட்டங்க ளில் கொண்டுவரப்பட்டது.

    தமிழகத்தில் திருநெல்வேலி, தேனி, நாமக்கல் மற்றும் கன்னியா குமரி மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மாவட்ட கலெக்டரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் ஒருப்ப குதியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு போதைப்பொ ருள் பயன்பாட்டி னால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையுடன் இணைந்து தன்னர்வ அமைப்புகளோடு இணைந்து அக்டோபர் மதாம் 29-ந்தேதி 9 வகையான விழிப்புணர்வு போட்டிகள் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி யில் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புனித சிலுவைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனத்தால் ஊடக போதை நோய் குறித்தான பயிற்சி பட்டறையினை பார்வையிட்டு பயிற்சி பெறும் முதன்மை தன்னார்வலர் உட்பட 250 பேர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ஊடகப்போதையில் மாணவர்கள் தங்களது பொரும்பாலான காலத்தை வீணடித்து தங்களது உடல்நலம் , சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்றனர்.

    ஆசிரியர்கள் இந்த பயிற்சியினை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு மாணவர்களிடையே விழிப்பு ணர்வினை தீவிரப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள் பயன் பாட்டினை முற்றிலுமாக நீக்குவதற்கு துணை புரிய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, ஜே.சி.எல், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாசா முக்த் பாரத் அபியான் முதன்மை தன்னார்வலர்கள், நெல்சன், அருள் ஜோதி, ஜெரோலின், அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு போக்குவரத்து பணிமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கிருந்து 24 மணிநேரமும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கையில் இருந்து இரவு 10 மணிக்குமேல் போக்குவரத்து வசதி கிடையாது.

    ஆனாலும் மானா மதுரையில் இருந்து மதுரை மற்றும் ராமேசுவரத்திற்கு எளிதில் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. காரைக்குடி, திருப்பத்தூருக்கு சென்றால் அங்கிருந்து ஊர் திரும்புவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்ட போக்குவரத்து பணிமனையை செயல்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மானாமதுரை பகுதியில் இருந்து இரவு- பகல் நேரங்களில் மதுரை, திருச்சி, சிவகங்கை, காரைக்குடி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது.

    தற்போது மானாமது ரைக்கும் மற்றும் வெளியூர் செல்ல சிவகங்கை பணிமனையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போதுள்ள பணிமனையில் சிமெண்டு தளம், டீசல் பணிமனை, பஸ்கள் பழுது நீக்கும் இடம் டிரைவர்கள், நடத்துநர்கள் தங்க வசதி ஏதும் கிடையாது. பெயரளவில் தினமும் 2 பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து தஞ்சாவூர், சிதம்பரம் செல்ல மானாமதுரை வழியாக பஸ் இருந்தது. இப்போது கிடையாது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக கமுதி மற்றும் பரமக்குடிக்கு பஸ் இருந்தது. ஆனால் இப்போது கிடையாது.

    மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல நேரடியாக பஸ் வசதி கிடையாது. செயல்படாமல் உள்ள பணிமனையை செயல்ப டுத்தி இந்த மேற்கண்ட வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும்.மானாமதுரை-மதுரை இடையே நேரடியாக பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிட வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பா டுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாபு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வேளாண்மை துறையில் தற்போதுள்ள மானியத்திட்டங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    • போதை பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று பேசினார்.
    • பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமை வகித்து கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கங்கள் மூலம் இளைஞர்கள் , மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பது குறித்து அதன் பயன்பாடுகளை தவிர்ப்பது" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் மலர்கொடி கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள் குறித்து அதற்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி , பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

    • போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
    • முக்கிய வீதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சி நிர்வாகம், சோழபுரம் போலீஸ் நிலையம் மற்றும் சோழபுரம் சுகாதாரத்துறை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சோழபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சோழபுரம் பேரூராட்சி தலைவர் கமலா செல்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

    தொடர்ந்து முக்கிய வீதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரூர் நகர செயலாளர் ஜெப்ருதீன் மற்றும் துணை த்தலைவர் ரைஹானா பர்வீன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ராஜன் மற்றும் தேவேந்திரன், தலைமைஆசிரியர் மணிகண்டன்மற்றும் ஆசிரியர்கள், தன்னா ர்வலர்கள் கலந்துகொ ண்டனர்.

    ×