search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிக்கும் பார்"

    • தமிழகம் முழுவதும் ஊழியர்களிடம் பணம் பறிக்கும் பார் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் புகார் அளித்தனர்
    • ஊழியர்களிடம் பணம் பறிக்கும் பார், நிர்வாகிகள் கூட்டத்தில் புகார்.

    திண்டுக்கல், ஜூலை. 18-

    திண்டுக்கல்லில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில கூட்டம் மாநில துணைத் தலைவர் ராமு தலைமையில் நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலம் முறை ஊதியம் ஆகியவை தமிழக அரசு வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள், முறையற்ற பணியிட மாறுதல் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சுழற்சி முறையில் வெளிப்படையாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

    மதுக்கூடங்களில் பார் உரிமையாளர்கள் அமைச்சர்களின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறிப்பது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டவிரோதமாக பார்களுக்கு அனுமதி வழங்கி அரசுக்கு ரூ.100 கோடி வரை இழப்பீடு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்களது கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து டாஸ்மாக் சங்கங்களையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநில கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

    ×