search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம் உயர்வு"

    • கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மங்கலம் சங்க தலைவர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் ,மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யை இன்னும் இரண்டு தினங்களில் நேரில் சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லக்கோரியும், உடனடியாக மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.

    இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.

    இந்த தொகையை மின் வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்துக்கான செலவு ரூ.5572 கோடியாக அதிகரித்துள்ளது.

    சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சிலர் ஒரே வீட்டிற்கு 3,4, மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

    சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால் கட்டணம் குறைந்து விடுகிறது.

    இதனால் தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

    இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.

    ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதில் முதல் 100 யூனிட் வரை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர், மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பவர்கள் பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அரசிதழலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டணம் உயர்வு, அனைத்து துறைகளிலும் முறைகேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கண்டன உரையாற்றுகிறார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மக்கள் விரோத அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் அ.ம.மு.க.கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர்.

    இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர்.

    தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதன் காரணமாக சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது.
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும் புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மு. பரஞ்சோதி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கனிதாசம்பத், தண்டரை மனோகரன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குமரவேலு, நகர செயலாளர் ரவிக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையடுத்து செங்கல்பட்டு டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வாகனங்கள் பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 9 உள்ளன. இதன்படி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என். ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கமலக்கண்ணன், சாமிநாதன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சேக்கலி, சைதை சுகுமார் மற்றும் வெற்றிவேல், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வைகுண்டராஜன், இனியன், மாவட்ட, வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்யானந்தம், வியாசை இளங்கோ, பாஸ்கர், ஜனார்த்தனன், சேவியர், லயன் ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் செம்பியம் மின்சார அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் மோகன், கோகுல், சாரதி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் துறைமுகம் எம். பயாஸ், ஆவின் அருள் வேல், எம். கண்ணன், எம்.சரவணன், எம்.பத்மநாபன், கே. பாலசுப்பிரமணியம், வெற்றிலை மாரிமுத்து, சந்தான கிருஷ்ணன், அருள்வேல், கண்ணன், சரவணன், சுரேஷ்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் தி.நகரில் மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா கலந்து கொண்டார்.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், எம்.கே.சிவா, புஷ்பா நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் பட்டாளத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தலைமையில் அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் போரூர் காரம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    திருப்பூரில் குமரன் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    • சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதலே மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    நீலாம்பூர்:

    கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர்.

    இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர்.

    மேலும் தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு, குறு தொழில் பிரிவிலிருந்து விசைத்தறியை தனியாக பிரித்து தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் இன்று காலை முதலே மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான முதலாளிகளாக அல்லாமல் பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில் விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலும் நிலவுகிறது. எனவே அரசு விதித்துள்ள 30 சதவீத மின்கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீத கட்டண உயர்வையும் முழுமையாக திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதி மக்களிடம் மட்டுமே தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தியது.
    • அக்கூட்டத்தல் 90 சதவீத மக்கள் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எண்ணங்களை, கோரிக்கைகளை புறக்கணித்து மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதி மக்களிடம் மட்டுமே தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தல் 90 சதவீத மக்கள் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    இருந்த பொழுதிலும் சம்பிரதாயத்திற்காக கருத்து கேட்பு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, மின் நுகர்வோர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, தற்பொழுது கட்டண உயர்வு அறிவிப்பை அறிவித்து இருக்கிறது. அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த மக்களுக்கு இச்செயல் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    வாக்குறுதிகளை அளித்து வெற்றிப்பெற்று, அவற்றை நிறைவேற்றாமல் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசையும், தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தையும் கண்டித்து, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி எனது தலைமையில் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

    தமிழ் மாநில காங்கிரஸ், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், இயக்க நண்பர்கள், பொது நல இயக்கங்கள் மற்றும் தொழில் நிறுவனத்தை சார்ந்தவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம்.
    • சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.

    சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

    இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

    எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

    உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடைமுறை தான். கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை.

    2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.

    உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    ×